பாஜக பெயர் கெட்டு விட்டது: வெங்கையா ஒப்புதல்!
சென்னை:
பாரதீய ஜனதாக் கட்சியில் சமீப காலமாக நிலவி வரும் அசாதாரண சூழல்கள் மற்றும் மோதல்களால் கட்சியின் பெயர்பாதிக்கப்பட்டுள்ளது என்று கட்சியின் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு ஒப்புக் கொண்டுள்ளார்.
சென்னை வந்த வெங்கையா நாயுடு செய்தியாளர்களிடம் பேசுகையில், கட்சியில் சமீப காலமாக நடந்த சில நிகழ்வுகள் (குஜராத்,ஜார்கண்ட், மதன்லால் குரானா விவகாரங்கள்) கட்சிக்கு ஓரளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதை மறுக்க முடியாது. இதைசரிக்கட்ட சென்னையில் நடைபெறவுள்ள 3 நாள் தேசிய செயற்குழுக் கூட்டத்தை பாஜக பயன்படுத்திக் கொள்ளும்.நாங்கள் கொள்கை ரீதியிலான, தொண்டர்களைக் கொண்ட கட்சி. எனவே இதுபோன்ற சலசலப்புகளை உடனடியாக சரி செய்யவேண்டிய நிலையில் உள்ளோம். அதற்கான பலமும், கால அவகாசமும் எங்களுக்கு உள்ளது.
தேசிய செயற்குழுக் கூட்டத்தின்போது அத்வானி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வார் என்று கூறப்படும் தகவல்களில்உண்மை இல்லை. அதற்கான அவசியமும் இப்போது எழவில்லை. கட்சியில் தலைமைப் பதவிக்கு பஞ்சமும் இல்லை.இவையெல்லாம் பத்திரிக்கைகள் கிளப்பி விடும் வேலைகள்.
கட்சியின் எதிர்கால நடவடிக்கைகளை சென்னை செயற்குழுக் கூட்டம் தீர்மானிக்கும். மேலும், மத்திய காங்கிரஸ் கூட்டணிஅரசின் செயல்பாடுகளையும் நாங்கள் இதில் ஆராய்வோம். மேலும், தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், பீகார், அஸ்ஸாம்,புதுவை மாநில தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறைகள் குறித்தும் நாங்கள் விரிவாக விவாதிக்கவுள்ளோம் என்றார்வெங்கையா நாயுடு.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications