விஜயகாந்த் ரசிகர்களை கவர்ந்த பெங்களூர் சாமியார்!

Subscribe to Oneindia Tamil

மதுரை:

விஜயகாந்த் மன்ற அரசியல் மாநாட்டிற்கு பெங்களூரைச் சேர்ந்த சாமியார் ஒருவர் வந்திருந்த ரசிகர்களிடையே பரபரப்பைஏற்படுத்தினார்.

நடிகர் விஜயகாந்த்துக்கு ஆரம்ப காலம் முதலே மதுரை அலங்காநல்லூரைச் சேர்ந்த ஒரு ஜோதிடர்தான் ஆஸ்தான ஜோதிடராகஇருந்து வந்தார். ஆனால் விஜயகாந்த் அரசியலில் இறங்குவது தொடர்பாக அந்த ஜோதிடர் சரியான ஆலோசனை கூறாததால்அதிருப்தி அடைந்த விஜயகாந்த் அலங்காநல்லூர் ஜோதிடர் சொல்வதை கேட்பதில்லை.

இந்த நிலையில்தான் பெங்களூரைச் சேர்ந்த சக்தி பாபா சுவாமிகளின் அறிமுகம் விஜயகாந்த்துக்கு கிடைத்தது. அவர்கூறியதைத்தான் இப்போது அவர் கேட்டு வருகிறார். அவரது ஆலோசனைப்படிதான் கட்சி தொடங்குவதற்கான நாளையும் அவர்முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

பாபாஜி சுவாமிகள் மதுரை மாநாட்டுக்கு வந்திருந்தார். விஜயகாந்த் குடும்பத்தினர் அமர்ந்திருந்த முதல் வரிசையில் அவரும்அமர வைக்கப்பட்டிருந்தார். அவரைப் பார்த்த ரசிகர்கள், இவர்தான் நம்ம கேப்டனுக்கு இப்போ ஆஸ்தான ஜோதிடர் என்று கூறிபரபரப்புடன் அவரைப் பார்த்துச் சென்றனர்.

மாநாட்டில் பேசிய மன்ற நிர்வாகிகள் விஜயகாந்த்துக்கு பல்வேறு பட்டங்களை சூட்டி பெருமைப்பட்டுக் கொண்டனர்,தென்னாட்டு சிங்கம், கரிபால்டி, இதய தெய்வம், வாஞ்சிநாதன், வல்லரசு, பேரரசு என்று விஜயகாந்த் நடித்த பல சினிமாப்படங்களின் பெயர்களையும் கூறி அவர்கள் விஜயகாந்த்தை வாழ்த்திப் பேசினர்.

மேடையில் அமர்ந்திருந்தாலும், ரசிகர்களிடையே ஏதாவது சலசலப்பு ஏற்பட்டால் உடனே மைக்கைப் பிடித்து அவர்களைஅமருமாறு கூறி கூட்டத்தினரை ஒழுங்குபடுத்துவதிலும் தீவிரமாக இருந்தார் விஜயகாந்த்.

திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் யாரும் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. ஒரு வேளை அவர்களை மாலையில் கூட்டிவரலாம் என்று விஜயகாந்த் முடிவு செய்திருக்கலாம் என ரசிகர்கள் பேசிக் கொண்டனர். பெரும்பாலன ரசிகர்கள், திரையுலகைச்சேர்ந்த பிரபலங்கள் யாராவது வரலாம் என்ற எதிர்பார்ப்புடன் இருந்ததை பார்க்க முடிந்தது.

மாநாட்டில் பெண்கள் கூட்டமும் ஓரளவுக்கு வந்தது. கிட்டத்தட்ட 1000 பெண்கள் வரை கூட்டத்திற்கு வந்திருப்பார்கள்.அவர்களில் பலர் தங்களது கைக் குழந்தையுடனும் வந்து அமர்ந்திருந்தனர்.

மற்ற அரசியல் கட்சிகளில் காணப்படும் சில சாஸ்திரங்கள் இங்கும் காணப்பட்டன. விஜயகாந்த்துக்கு தங்க கிரீடம், வெள்ளிசெங்கோல் கொடுக்கப்பட்டது. அவரும் அதைப் பெற்றுக் கொண்டார். ஆனால் சிம்மாசனம் போன்ற இருக்கையில் மட்டும்உட்கார மறுத்து விட்டார்.

திமுக பாணியில் நிதியளிப்பும் மாநாட்டு மேடையில் நடந்தது. சென்னை மாவட்ட விஜயகாந்த் மன்றம் சார்பில் கட்சி நிதியாக ரூ.50,000 விஜயகாந்த்திடம் வழங்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+