முன்னாள் எம்.எல்.ஏ. தாமரைக்கனி மரணம்!

Subscribe to Oneindia Tamil

மதுரை:

ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டசபைத் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும், நகராட்சித் தலைவருமான தாமரைக்கனி மதுரையில் புதன்கிழமைஅதிகாலை மரணமடைந்தார்.

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் செல்லப் பிள்ளையாக இருந்தவர் தாமரைக்கனி. முரட்டுத்தனமான குணத்தால் அவரைப் பார்த்தாலேசட்டசபையில் பலரும் நடுங்கும் அளவுக்கு குணம் கொண்டவர். தனது கட்சியைச் சேர்ந்த சாத்தூர் ராமச்சந்திரனை சட்டசபையிலேயேஎம்.ஜி.ஆர். முன்னிலையில் தாக்கும் அளவுக்கு தைரியமும், துணிச்சலும் மிக்கவர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியின் எம்.எல்.ஏவாக நீண்ட காலம் இருந்த தாமரைக்கனி ஜெயலலிதா கைக்கு அதிமுக மாறிய பின்னர் ஓரம்கட்டப்பட்டார். பின்னர் கட்சியிலிருந்து 2 முறை நீக்கப்பட்டார். இதையடுத்து திமுகவில் சேர்ந்து அங்கு செயல்பட்டு வந்தார் தாமரைக்கனி.

கடந்த சில மாதங்களாக அவருக்கு உடல் நலம் சரியில்லாமல் போனதால் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவ்வப்போதுசிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவரது உடல் நிலை மோசதமடையவே மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் அவரது உடல் நிலை மோசமடைந்தது. சிறிது நேரத்தில் அவர் மரணமடைந்தார். இதைத்தொடர்ந்து தாமரைக்கனியின் உடல் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில்உடல் வைக்கப்பட்டுள்ளது.

தாமரைக்கனியின் மூத்த மகன் இன்பத் தமிழன் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சராக இருக்கிறார். தந்தையும், மகனும் பேசிக்கொள்வது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+