மகள்-பேத்திகளிடம் காமக் கொடூரம்: பஸ் அதிபர் மீது புகார்!
சென்னை:
மகள் மற்றும் பேத்திகளிடம் தனது காமக் கொடூரத்தை அரங்கேற்றியதாக சென்னையைச் சேர்ந்த தனியார் பேருந்து உரிமையாளர் மீதுஅவரது 2வது மனைவி போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்த புஷ்பா என்பவர் மாநகர காவல்துறை ஆணையர் நடராஜை சந்தித்து ஒரு புகார் மனுவைக் கொடுத்தார். அதில்அவர் கூறியிருப்பதாவது:எனது கணவர் முருகேசன். அவர் கடந்த 1970ம் ஆண்டு விபத்தில் சிக்கி இறந்து விட்டார். அவர் மூலம் எனக்கு லட்சுமி என்ற பெண்குழந்தை உள்ளது. கணவர் மறைவுக்குப் பின்னர் நான் 1971ம் ஆண்டு திருநாவுக்கரசு என்பவரைத் திருமணம் செய்தேன். அவர், வி.எஸ்.டி.என்ற பெயரில் 40 லாரிகளையும், 4 ஆம்னி பேருந்துகளையும் வைத்து நிறுவனம் நடத்தி வருகிறார்.
திருநாவுக்கரசுவுக்கு அவரது முதல் மனைவி மூலம் குழந்தைகள் உள்ளனர். எனக்கு ரூ. 60 லட்சம் மதிப்பில் சொத்து இருந்தது. அவைஅனைத்தையும் தனது பெயருக்கு திருநாவுக்கரசு மாற்றிக் கொண்டு விட்டார். நான் அதைப் பற்றிக் கூட கவலைப்படவிலலை. ஆனால்அவர் செய்த காமக் கொடூர செயல்களைத் தாங்க முடியாமல்தான் இந்தப் புகாரை கொடுத்துள்ளேன்.
திருமணமானது முதல் என்னிடம் அவர் மிகவும் கொடூரமாக நடப்பார். அவருக்கு காம வெறி அதிகம். தினசரி அவரிடம் நான் படாத பாடுபட்டேன். இதை விடக் கொடுமை, எனது மகள் லட்சுமியை அவளது 14 வயதிலேயே எனது கணவர் தனது இச்சைக்குகுப் பயன்படுத்திக்கொண்டார். மகள் முறையில் உள்ள பெண்ணை இப்படிப் பாழடித்து விட்டீர்களே என்று நான் கதறி அழுதபோது, எனக்குப் பிறக்காதபெண்தானே, இஷ்டம் இருந்தால் இருங்கள், இல்லாவிட்டால் தொலைத்து விடுவேன் என்று அவர் மிரட்டினார்.
இதை வெளியில் சொன்னால் அசிங்கம் என்பதால் நான் பொறுத்துக் கொண்டேன். ஆனால் தொடர்ந்து எனது மகளிடம் அவர் தகாதமுறையில் நடந்து கொண்டதால் அவள் 2 முறை கர்ப்பமானாள். இதை யாருக்கும் தெரியாமல் கலைத்து விட்டோம்.
எனது கணவரிடமிருந்து மகளை காப்பாற்ற அவளுக்குத் திருமணம் செய்து வைத்தேன். திருமணத்திற்குப் பிறகு அவளுக்கு 2 பெண்குழந்தைகள் பிறந்தனர். திருமணமான பிறகும் அவர் எனது மகளை விடவில்லை. வீட்டுக்கு வரும்போதெல்லாம் அவளை தனது காமப்பசிக்கு இரையாக்கினார். இது எனது மருமகனுக்குத் தெரிந்து விட்டது. இதனால் எனது மகளை அவர் என் வீட்டுக்கு அனுப்பி விட்டார்.
2 மகள்களுடன் வீட்டுக்கு வந்த பின்னர் எனது மகளை எனது கணவர் தனது காமப் பசிக்கு இரையாக்கிக் கொண்டார். இதை நான் தட்டிக்கேட்டபோது, என் மீது மண்ணெண்ணை ஊற்றி எரிக்கப் பார்த்தார். அதிர்ஷ்டவசமாக நான் உயிர் தப்பினேன்.
இந்த நிலையில் எனது மகளுக்குப் பிறந்த அவளது இரு மகள்களிடமும் தனது காம விளையாட்டை எனது கணவர் ஆரம்பித்தார். இதற்குமேலும் பொறுக்க முடியாமல்தான் போலீஸை அணுகியுள்ளேன்.
எனக்குச் சொந்தமான சொத்துக்களை அவரிடமிருந்து மீட்டுத் தர வேண்டும், மகள் மற்றும் பேத்திகளிடம் காம விளையாட்டில் ஈடுபட்டஎனது கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார் புஷ்பா.
இதுகுறித்து விசாரணை நடத்த ஆணையர் நடராஜ் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications