ஹோட்டலில் காபரே: 5 குடும்பப் பெண்கள் கைது!
சென்னை:
சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் காபேர நடனம் ஆடிய 5 குடும்பப் பெண்கள் உள்பட 11 பேரை போலீஸார் கைதுசெய்தனர்.
சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் இரவு நேர நடனம், காபரே நடனம் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும், 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு நட்சத்திர ஹோட்டலில் மது அருந்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்த தடை உத்தரவுகளை நட்சத்திர ஹோட்டல்கள் முறையாக கடைப்பிடிக்கின்றனவா என்பதை போலீஸார் அவ்வப்போதுகண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் புரசைவாக்கம் பகுதியில் உள்ள 2 நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் பெண்கள் நடனமாடுவதாக போலீஸாருக்குத்தகவல் வந்தது. இதையடுத்து போலீஸ் படை மாறு வேடத்தில் அங்கு சென்றது.
அப்போது ஹோட்டலுக்கு உள்ளே 11 பெண்கள் அரை குறை ஆடைகளுடன் ஆபாச அசைவுகளுடன் நடனம் ஆடிக்கொண்டிருந்தனர். அதை 8 பேர் அமர்ந்து பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர். உள்ளே நுழைந்த போலீஸார் ரசிகர்களை வெளியேவிரட்டினர். பின்னர் 11 பெண்களையும் கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரணை நடத்தியதில், தங்களது நடனத்தைப் பார்த்து ரசிக்க ஹோட்டல் உரிமையாளர் தலா ரூ. 200 டிக்கெட்கட்டணம் நிர்ணயித்துள்ளார் என்றும், அவர் தற்போது தலைமறைவாகி விட்டதாகவும் தெரிவித்தனர்.
அந்த அழகிகளில் அனிதா, நதியா, ராணி, பர்வீன், பிரியா ஆகியோர் கல்யாணமானவர்கள், குடும்பப் பெண்கள். மற்றஅனைவரும் 18 முதல் 26 வயது கொண்டவர்கள்.
அனுமதியில்லாமல் காபரே நடனம் நடத்தியதாக ஹோட்டலின் இன்னொரு பங்குதாரர் தங்கராஜ், மேலாளர் தண்டபாணி,ஊழியர் முருகேசன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications