கட்சி அலுவலமாகிறது விஜயகாந்த் கல்யாண மண்டபம்!
சென்னை:
நடிகர் விஜயகாந்த்துக்குச் சொந்தமான சென்னை கோயம்பேட்டில் உள்ள ஆண்டாள் அழகர் திருமண மண்டபம் கட்சிஅலுவலகமாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு புதிய நிர்வாகிகளுக்குத் தேவையா அறைகள் அமைக்கப்படும் பணி முழு வீச்சில்நடந்து வருகிறது.
தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ள விஜயகாந்த், அடுத்து நிர்வாகிகள் தேர்வு செய்வதில்மும்முரமாகியுள்ளார். முக்கியக் கட்சிகளான திமுக, அதிமுக, மதிமுக, பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களின் தீவிரமறைமுக எதிர்ப்புக்கு ஆளாகியுள்ள விஜயகாந்த், அக்கட்சியினரை சமாளித்து செயல்படக் கூடிய திறமை படைத்தவர்களை தனதுகட்சிக்கு நிர்வாகிகளாக நியமிக்க முடிவு செய்துள்ளார்.அதற்கு முன்னதாக, கட்சி அலுவலகத்தை புதிய பொலிவுடன் நிர்மாணிக்க முடிவு செய்துள்ளார். தற்போது கோயம்பேட்டில் உள்ளவிஜயகாந்த்துக்குச் சொந்தமான கல்யாண மண்டபம்தான் கட்சி அலுவலகமாக திகழப் போகிறது.
இதையடுத்து கல்யாண மண்டபமாக இருந்த அதை கட்சி அலுவலகமாக மாற்றும் வேலைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அங்குபுதிய நிர்வாகிகளுக்கான அறைகள் அமைக்கப்படுகின்றன. கட்சித் தலைவர், பொதுச் செயலாளர், மகளிர் அணி, வழக்கறிஞர்அணி, தொழிலாளர் அணி உள்ளிட்ட பல்வேறு அணிகளின் பொறுப்பாளர்களுக்கு தனித் தனி அறைகள் ஒதுக்கப்படவுள்ளன.
இதுதவிர ஆலோசனைக் கூட்டங்கள், செயற்குழு, பொதுக் குழுக் கூட்டங்கள் நடத்துவதற்கு வசதியாக மண்டபத்தின் ஒரு பகுதிகூட்ட அரங்கமாக மாற்றப்படுகிறது.
கட்சித் தலைவராக விஜயகாந்த் இருப்பார், பொதுச் செயலாளராக ராமு வசந்தன் இருப்பார். மற்ற நிர்வாகிகள் தேர்வு விரைவில்நடைபெறவுள்ளது.
சென்னையில் உள்ள மிகப் பெரிய கட்சி தலைமை அலுவலகங்களில் ஒன்றாக இதன் மூலம் விஜயகாந்த்தின் கல்யாண மண்டபம்மாறுகிறது. ஏற்கனவே திமுக, அதிமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு பிரமாண்டமான கட்சித் தலைமை அலுலகங்கள் உள்ளனஎன்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications