எம்.ஜி.ஆர். வேனில் விஜயகாந்த் பிரசாரம்!
சென்னை:
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். பயன்படுத்தி வந்த பிரசார வேனில், டிசம்பர் 1ம் தேதி முதல் கிராமம் கிராமமாக சென்று மக்களைசந்திக்கப் போவதாக நடிகர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆர்.தனது அரசியல் பயணங்கள், தேர்தல் பிரசாரங்களின்போதுபயன்படுத்தி வந்த பிரசார வேன் தற்போது விஜயகாந்த் வசம் உள்ளது. இந்த வேனை கடந்த 1994ம் ஆண்டு, எம்.ஜி.ஆரின்மனைவி ஜானகி ராமச்சந்திரன், விஜயகாந்த்துக்கு தனது பரிசாக வழங்கியிருந்தார்.மதுரை மாநாட்டில் இந்த வேனுடன் விஜயகாந்த் வந்தார். இந்த வேனில் இருந்தபடியே கட்சிக் கொடியையும் ஏற்றினார்.டி.எம்.டபிள்யூ 2005 என்ற எண் கொண்ட இந்த வேனை பயன்படுத்துவது ராசியாக இருக்கும் என்பதால் இனிமேல் தனதுபிரசாரங்களுக்கு எம்.ஜி.ஆர் வேனையை விஜயகாந்த் பயன்படுத்தப் போவதாக கூறப்பட்டுள்ளது.
வேனின் எண்ணும், விஜயகாந்த் கட்சி ஆரம்பித்துள்ள வருடமும் ஒன்றாக இருப்பதும் சரியான பொருத்தம் என்று விஜயகாந்த்ரசிகர்கள் கூறுகிறார்கள். இந்த வேன் மூலம் டிசம்பர் 1ம் தேதி முதல் கிராமம் கிராமமாக சென்று மக்களை சந்தித்து தனது கட்சியைவளர்க்கப் போவதாகவும் விஜயகாந்த் ஏற்கனவே கூறியுள்ளார்.
எம்.ஜி.ஆர். பயன்படுத்திய இந்த வேனைப் பார்க்க மதுரை மாநாட்டிற்கு வந்திருந்த ரசிகர்கள் பெரும் ஆர்வம் காட்டினர்.
கருணாநிதி வாழ்த்து: விஜயகாந்த் புதுக் கட்சியை தொடங்கியிருப்பதையொட்டி திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட தலைவர்கள், நடிகர், நடிகையர் விஜயகாந்த்துக்கு வாழ்த்துத்தெரிவித்து தந்தி அனுப்பியிருந்தனர். மொத்தம் 4446 வாழ்த்துத் தந்திகள் மதுரை மாநாட்டுக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டது.
மாநாட்டில் நன்றியுரையாற்றிய விஜயகாந்த், மாநாட்டுக்கு சிறப்பான பாதுகாப்பு அளித்ததற்காக காவல்துறைக்கும், முதல்வர்ஜெயலலிதாவுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications