பலவீன பிரதமர்: மன்மோகன் மீது அத்வானி பாய்ச்சல்
சென்னை:
இதுவரை இருந்த பிரதமர்களிலேயே மிகவும் பலவீனமான, அதிகாரம் ஏதுமில்லாத பிரதமர் மன்மோகன் சிங்தான் என்று பாஜகதலைவர் அத்வானி கூறியுள்ளார்.
சென்னையில் பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை தொடங்கியது. இக்கூட்டத்தில் அத்வானிபேசுகையில், மன்மோகன் சிங்கையும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசையும் கடுமையாக சாடினார்.அத்வானி பேசுகையில், இதுவரை நமது நாடு கண்ட பிரதமர்களியே அதிகாரம் இல்லாத, பலவீனமான பிரதமர் மன்மோகன்சிங்தான். காங்கிரஸ் தலைமையிலான மத்திய ஆட்சியில் பல்வேறு விஷயங்களில் தெளிவான கொள்கை இல்லை.
வெளியுறவுக் கொள்கை மிகவும் மோசமாக உள்ளது. இதுதவிர எந்த முடிவை எடுத்தாலும், இடது சாரிக் கட்சிகளை சார்ந்தேஎடுக்க வேண்டியுள்ளது. சுயமாக சிந்தித்து முடிவெடுக்கும் அதிகாரத்தில் மன்மோன் சிங்கும் இல்லை, இந்த ஆட்சியும் இல்லை.நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் முட்டுக் கட்டையாக இடது சாரிக் கட்சிகள் உள்ளன.
பதவியில் நீடிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக இடது சாரிக் கட்சிகள் சொல்வதை எல்லாம் காங்கிரஸ் கேட்கிறது.அக்கட்சியின் கலாச்சாரமே பிறரை அண்டிப் பிழைப்பதுதான்.
பாஜக கூட்டணி அரசு இருந்தபோது இஸ்ரேலுடன் நட்பைப் புதுப்பித்து நெருங்கிய உறவுக்கு வழிகோலியது. ஆனால் அதைதற்போதைய காங்கிரஸ் அரசு தவற விட்டு விட்டது. இப்போது, பாகிஸ்தான், இஸ்ரேலுடன் கை குலுக்கி நட்பு பாராட்டியுள்ளது.
நாடு முழுவதும் தீவிரவாதம் பரவி விட்டது. இதை ஒடுக்க காங்கிரஸ் அரசு தவறி வருகிறது. நேபாள மாவோயிஸ்ட்தீவிரவாதிகள், இந்திய மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுடன் இணைந்து பலம் பெற்று வருகின்றனர். ஆனால் இதைத் தடுக்க மத்தியஅரசு தவறி வருகிறது, மெத்தனம் காட்டுகிறது.
இப்படித் தவறுக்கு மேல் தவறாக இந்த அரசு செய்து கொண்டுள்ளது. இது நாட்டுக்கு பேராபத்தாக முடியும்.
இந்துக்களை இந்த அரசு புறக்கணிக்கிறது. ஆந்திராவில் உள்ள ஆளும் காங்கிரஸ் அரசு முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்போகிறது. அங்கு இந்துக்களுக்கு மரியாதை இல்லை. இந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மத்திய அரசு பார்க்கிறது. இதைபொருத்துக் கொள்ள மாட்டோம்.
பாஜக தனது இந்துத்துவா கொள்கையை ஒருபோதும் கைவிடாது. மத்திய அரசை அகற்ற அனைவரும் சேர்ந்து பாடுபடவேண்டும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications