திமுக எம்.எல்.ஏக்களுடன் கருணாநிதி 21ம் தேதி ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் வருகிற 21ம் தேதி திமுக எம்.எல்.ஏக்களுடன் அக்கட்சித் தலைவர் கருணாநிதி ஆலோசனை நடத்தவுள்ளார்.
திமுக கொறடா புகழேந்தி இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்ணா அறிவாலயத்தில் 21ம் தேதி மாலை 5மணிக்கு தலைவர் கலைஞர் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெறும்.
இக்கூட்டத்தில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். சட்டசபை மழைக்காலக் கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள் குறித்து இக்கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications