திமுகவை மீண்டும் வம்புக்கிழுக்கும் இளங்கோவன்
சென்னை:
காங்கிரஸ் ஆதரவு மட்டும் வேண்டும், ஆனால் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் அமரக் கூடாது என்று நினைப்பது என்ன நியாயம்என்று திமுகவுக்கு மறைமுகமாக மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கேள்வி விடுத்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் அடுத்து கூட்டணி ஆட்சிதான் அமையும், காங்கிரஸுக்கும் ஆட்சியில் பங்கு தர வேண்டும்என்று இளங்கோவன் பேசினார். இது திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், திமுக தலைவர் கருணாநிதிகுறித்து இளங்கோவன் கடுமையாக விமர்சித்ததால் திமுக தரப்பு கொந்தளித்தது.மத்தியில் கூட்டணி அரசுக்கு ஆதரவை வாபஸ் பெறப் போவதாக திமுக தரப்பு மிரட்டல் விடுத்தது. இதையடுத்து காங்கிரஸ் கட்சிசமரசத்திற்கு வந்தது. இளங்கோவன் கண்டித்து வைக்கப்பட்டார்.
இந்த நிலையில், மீண்டும் திமுகவை மறைமுகமாக கடுமையாக சாடியுள்ளார் இளங்கோவன். சென்னையில் காங்கிரஸ் சார்பில்நடத்தப்பட்ட பேரணியில் கலந்து கொண்டு இளங்கோவன் பேசுகையில், புதுவையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. ஆனால்தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வெறுமனே ஆதரவு மட்டுமே கொடுத்துக் கொண்டுள்ளது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்குஆட்சியில் பங்கு தர யாருக்குமே விருப்பவில்லை.
நமது ஆதரவு மட்டும் வேண்டும். ஆனால் நாம் ஆட்சியில் அமரக் கூடாதாம். இது என்ன நியாயம்? காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில்செய்யப்பட்ட சாதனைகளை மக்களிடம் சரியாக சொல்லத் தவறியதால்தான் இன்றைக்கு நாம் எதிர்க்கட்சியாக மாறியுள்ளோம்.
சென்னையில் உள்ள பெரும்பாலான பாலங்கள் காமராஜர் ஆட்சிக்காலத்தில் கட்டியது. சேது சமுத்திரத் திட்டத்தை நாங்கள்தான்கொண்டு வந்தோம் என இன்று பல கட்சிகள் போட்டி போட்டுக் கூறுகின்றன. ஆனால் உண்மையில் அதை நிறைவேற்றியதுசோனியா காந்தியின் ஆசி பெற்ற பிரதமர் மன்மோகன் சிங்தான், நிதியுதவி அளித்தது காங்கிரஸ் கட்சியின் ப.சிதம்பரம்தான்என்பதை இந்தக் கட்சிகள் மறந்து விட்டன.
நான் அறைக்குள், செயல்வீரர்கள் கூட்டத்தில் ஏதாவது பேசினால், அதற்கு பூ வைத்து ஜடை பின்னி குழப்பி விடுகிறார்கள்.ஆனால் இன்று எல்லோருக்கும் மத்தியில் இதை பகிரங்கமாகவே சொல்கிறேன்.
தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு காங்கிரஸ் கட்சியை வலுவுள்ளதாக மாற்றும் கடமை நமது கட்சியின் இளைஞர்கள்அனைவருக்கும் உள்ளது என்றார் இளங்கோவன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications