என் மூச்சும், பேச்சும் என்றும் தமிழ் என்றே கூறும்: கருணாநிதி
திருநெல்வேலி:
என் மூச்சும், பேச்சும் என்றும் தமிழ், தமிழ் என்றுதான் கூறும் என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
நெல்லை, பாளையங்கோட்டையில் திமுக முப்பெரும் விழா இன்று காலை தொடங்கியது. இதில் பொதுச் செயலாளர் அன்பழகன்தலைமை வகித்தார். கருணாநிதி, பரிசு மற்றும் விருதுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.கருணாநிதி பேசுகையில், ஆண்டுதோறும் இந்த முப்பெரும் விழா சென்னையில்தான் நடத்தப்படும். ஆனால் மாவட்டத்தலைநகரங்களில் நடத்த வேண்டும் என்று கழகத்தினர் கோரிக்கை வைத்ததன் பேரில் கடந்த ஆண்டு முதல் மாவட்டத்தலைநகரங்களில் நடத்தி வருகிறோம்.
ஒரு முறை புலவர் ஒருவர் பாரதிதாசன் பாடலை மேற்கோள்ள காட்ட முயன்று பேசியபோது வரிகள் கிடைக்காமல் தடுமாறினார்.அப்போது மேடையில் இருந்த நான் எடுத்துக் கொடுத்தேன். இதைப் பார்த்த முரசொலி மாறன், புலவர்களே இப்படித்தடுமாறுகிறார்களே, மாணவர்கள் கதி என்ன என்று கேட்டார். பின்னர் பாரதிதாசன் பாடல் ஒப்புவித்தல் போட்டியை நடத்தலாம்என்ற யோசனையைச் சொன்னார்.
முரசொலி மாறனின் யோசனைப்படி பாரதிதாசன் பாடல்களை ஒப்புவித்தல் போட்டியை திமுக நடத்தி வருகிறது. என் மூச்சுஉள்ளவரை, பேச்சும், மூச்சும் தமிழ் தமிழ் என்றே கூறும். தமிழுக்கும், மக்களுக்காகவும்தான் நான் வாழ்கிறேன்.
திமுக அறக்கட்டளை மூலம் செய்யப்பட்ட நிதி உதவிகளை இதுவரை நான் சொன்னதில்லை. ஆனால் சில கோடிகளை அதுதாண்டி விட்டது என்பதை இப்போது சொல்கிறேன்.
சிலர் இருக்கிறார்கள். நான் அங்கே கொடுத்தேன், இங்கே கொடுத்தேன் என்கிறார்கள். அவர்களுக்காக இதை சொல்கிறேன்.நலிந்தோருக்கு உதவுவதில் திமுகவுக்கு இணையாக இங்கு யாரும் இல்லை. இதை பெருமையோடு சொல்லிக் கொள்கிறேன். திமுகஅறக்கட்டளை சார்பில் ரூ. 5.82 கோடி வரை உதவி செய்துள்ளோம்
இப்படிச் செய்வதை எல்லா கட்சியினரும் பின்பற்றலாம். இன்று வேலியே பயிரை மேய்கிறது. அதற்கு இடம் தராமல் இருக்கநேர்மையானவர்களை ஊக்குவிக்க இந்தப் பரிசுகளை வழங்குகிறோம் என்றார் கருணாநிதி.
முன்னதாக பெரியார் விருது, அண்ணா விருது, பாரதிதாசன் விருது, கலைஞர் விருது ஆகியவற்றை கருணாநிதி வழங்கினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications