கர்நாடகத்தின் ஹோகனேக்கல் ஊடுறுவல்: அதிகாரிகள் சந்திப்பு
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் ஹோகனேக்கல் அருவிக்கு அருகே உள்ள தமிழகத்திற்குச் சொந்தமான மலைப் பகுதிகளை கர்நாடக அரசுஉரிமை கொண்டாடுவது தொடர்பாக இரு மாநில அதிகாரிகள் சந்தித்துப் பேசினர். இதன் தொடர்ச்சியாக 19ம் தேதி சர்வேமேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழக, கர்நாடக எல்லைப் பகுதியில் ஹோகனேக்கல் உள்ளது. கர்நாடகத்தில் உற்பத்தியாகும் காவிரி ஆறு, ஹோகனேக்கல்வழியாகத்தான் தமிழகத்திற்குள் நுழைகிறது. காவிரி நுழையும் இடத்தில் ஹோகனேக்கல் அருவி உள்ளது. இது சுற்றுலாத்தளமாகவும் விளங்கி வருகிறது.இந்த நிலையில் ஹோகனேக்கல் பகுதியில் உள்ள சில இடங்களில் தமிழக மீனவர்கள், பரிசல் ஓட்டிகள் சென்றபோது அவர்களைகர்நாடக வனத்துறையினர் பிடித்து அபராதம் விதித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் அருவியில் குளிக்க வருவோரின் வசதிக்காக இரும்புக் கம்பிகளை கொண்டு தடுப்பு அமைக்கும் பணியில் சிலஊழியர்களை தமிழக சுற்றுலாத்துறை ஈடுபடுத்தியது. ஆனால் திடீரென அங்கு வந்த கர்நாடக வனத்துறையினர் ஊழியர்களைவிரட்டி விட்டு, இரும்புக் கம்பிகள், கடப்பாறைகளை ஆற்றில் எறிந்து விட்டது.
கர்நாடக வனத்துறையினரின் இந்தச் செயல் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்பிரச்சினைக்கு முடிவு கட்டும்வகையில், தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் சுதீப் ஜெயின், காவல்துறைக் கண்காணிப்பாளர் ஜெயராம், வனத்துறைஅதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர், கர்நாடக வனத்துறை குழுவினரை ஹோகனேக்கலுக்கு வரவழைத்துப் பேசினர்.
ஹோகனேக்கல் பகுதியில் கர்நாடகத்தினர் ஊடுறுவியுள்ள பகுதிகள் தமிழகத்திற்குச் சொந்தமானவை என்று வரைபடத்துடன்கர்நாடக குழுவினருக்கு விளக்கிக் கூறினர். இருந்தும் கர்நாடக தரப்பினர் அவை தங்களுக்கு சொந்தமான இடம் என்றுபிடிவாதமாக கூறினர். இதனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதைத் தொடர்ந்து வருகிற 19ம் தேதி இரு மாநில சர்வே அதிகாரிகளைக் கொண்டு எல்லைப் பகுதி குறித்து சர்வே நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications