சுவாமி ஏற்படுத்திய சலசலப்பு!
சென்னை:
சென்னையில் தொடங்கிய பாஜக செயற்குழுக் கூட்டம் நடந்த ஹோட்டலுக்கு திடீரென ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியசுவாமி வந்ததால் பாஜகவினரிடையே பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
சென்னை சவேரா ஹோட்டலில் பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை தொடங்கியது. காலை முதலேதலைவர்கள் வரத் தொடங்கினர். இந்த நிலையில் யாரும் எதிர்பாராத ஒரு பிரமுகர் சவேரா ஹோட்டலுக்கு வந்து இறங்கினார்.அவரைப் பார்த்ததும் கூடியிருந்த பாஜகவினர் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.சலசலப்பை ஏற்படுத்தியவர் சாட்சாத் சுப்ரமணிய சுவாமியேதான். ஹோட்டலுக்குள் சென்றவர் நேராக முன்னாள் அமைச்சர் முரளிமனோகர் ஜோஷியை சந்தித்துப் பேசினார். சிறிது நேரம் கழித்து வெளியே வந்த அவரை செய்தியாளர்கள் சூழ்ந்த கொண்டனர்.
அவர்களிடையே சுவாமி பேசுகையில், நான் வந்ததில் விசேஷம் எதுவும் இல்லை. முரளி மனோகர் ஜோஷி எனது நீண்ட நாளையநண்பர். அவரைப் பார்க்கத்தான் வந்தேன்.
ரோம் சக்திக்கு (சோனியா காந்திக்கு) எதிராக ஓம் சக்தியை, அதாவது இந்துக்களைத் திரட்ட வேண்டியுள்ளது. அதுதொடர்பாகஜோஷியிடம் பேசினேன். பாஜக செயற்குழுக் கூட்டத்தில் சங்கராச்சாரியார் கைதைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்படும் எனநினைக்கிறேன். அவ்வளவுதான் என்று கூறி விட்டுச் சென்றார் சுவாமி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications