நீதிபதிகள் நியமனத்தில் தாமதம்: வக்கீல்கள் வேலைநிறுத்தம்
சென்னை:
சென்னை உயர்நீதிமன்றண் மற்றும் மதுரைக் கிளையில் காலியாக உள்ள நீதிபதிகளின் பணியிடங்களை நிரப்புவதில் வரலாறுகாணாத தாமதம் நிலவுவதைக் கண்டித்து வழக்கறிஞர்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் உயர்நீதிமன்றப்பணிகள் முற்றிலும் ஸ்தம்பித்தன.
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 42 நீதிபதிகளும், மதுரை கிளைக்கு 7 நீதிபதிகளும் பணியில் இருக்க வேண்டும். ஆனால் இருநீதிமன்றங்களையும் சேர்த்து தற்போது 23 நீதிபதிகள்தான் உள்ளனர்.காலியாக உள்ள இடங்களுக்கு நீதிபதிகளை நியமிக்கக் கோரி சென்னை உயர்நீதமன்ற தலைமை நீதிபதி பலமுறைபரிந்துரைப்பட்டியலை அனுப்பியும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்து வருகிறது. திமுக மற்றும்பாமக தரப்பிலிருந்து சில நெருக்கடிகள் கொடுக்கப்படுவதால்தான் நீதிபதிகள் நியமனத்தில் தாமதம் ஏற்பட்டிருப்பதாகவழக்கறிஞர்கள் சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த நிலையில், நீதிபதிகள் நியமனத்தில் நிலவும் கால தாமதத்தைக் கண்டித்து சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரைகிளையில் இன்று வழக்கறிஞர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டனர்.
இதனால் நீதிமன்றப் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. ஒரு வழக்கிலும் இன்று விசாரணை நடைபெறவில்லை. போராட்டம்குறித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் பிரசாத் கூறுகையில், 17 புதிய நீதிபதிகளை நியமிப்பதற்குஉச்சநீதிமன்றம் ஒப்புதல் கொடுத்தும் கூட இன்னும் அவர்களை நியமிக்காமல் மத்திய அரசு தாமதம் செய்து வருகிறது.
நீதிபதிகள் பற்றாக்குறை காரணமாக நீதிமன்றப் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. நீதித்துறையே இயங்க முடியாத நிலைஏற்பட்டுள்ளது. எங்களது கோரிக்கையை ஏற்று உடனடியாக காலியிடங்கள் நிரப்பப்படாவிட்டால் போராட்டத்தை தொடரவேண்டியிருக்கும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications