பிச்சைக்காரர்கள் கைகலப்பு! பிச்சை கொடுத்தவருக்கு மண்டை உடைப்பு!
சென்னை:
சென்னை அருகே பிச்சை எடுத்து வந்த காசைப் பங்கிட்டுக் கொள்வதில் பிச்சைக்காரர்களிடையே பெரும் மோதல் ஏற்பட்டு அந்த ஏரியாவையே கலக்கி விட்டனர்.
ஈஞ்சம்பாக்கம் பகுதியில் உள்ள சாய்பாபா கோவில் நுழைவாயிலில் ஏராளணான பிச்சைக்காரர்கள் பக்தர்களிடம் பிச்சைஎடுத்தனர். வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ரவீந்திரன் என்ற தொழிலதிபர் ஒரு பிச்சைக்காரரிடம் கணிசமான தொகையைக் கொடுத்துஅனைவரும் பங்கிட்டுக் கொள்ளுமாறு கூறியுள்ளார்.இதையடுத்து அங்கிருந்த 15 பிச்சைக்காரர்களும் ஒன்றாக கூடி பணத்தைப் பங்கிட ஆரம்பித்தனர். ரவீந்திரன் கூடவே அங்குநின்றுள்ளார். அவர்களில் சீனியர்களான வீராசாமியும், அவரது மனைவி செல்வியும் தாங்கள் நீண்ட காலமாக இங்கு பிச்சைஎடுத்து வருவதால் தங்களுக்கு அதிக தொகை வேண்டும் எனக் கூறியுள்ளனர்.
ஆனால் அதற்கு மற்ற பிச்சைக்காரர்கள் மறுத்து விட்டனர். இதையடுத்து அவர்களுக்கிடையே மோதல் மூண்டது. இந்த நிலையில்,வீராசாமியும், செல்வியும் இந்தப் பிரச்சினைக்கு நீங்கள்தானே காரணம் என்று கூறி ரவீந்திரனை கட்டையால் எடுத்துத் தாக்கஆரம்பித்துள்ளனர்.
நிலைகுலைந்த ரவீந்திரன் அலற ஆரம்பித்தார். அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதையடுத்துகோவில் மேலாளர் ஸ்ரீதர் அங்கு விரைந்து வந்த ரவீந்திரனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். போலீஸாருக்கும்தகவல் கொடுத்தார்.
போலீஸார் விரைந்து வந்து மோதலில் ஈடுபட்ட பிச்சைக்காரர்களை காவல் நிலையத்திற்கு அள்ளிச் சென்றனர். அங்கு வைத்துஅவர்களை எச்சரித்த பின்னர் வெளியே அனுப்பினர். பிச்சைக்காரர்களிடம் கொடுக்கப்பட்ட பணம் என்ன ஆனது என்றுதெரியவில்லை!
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications