சென்னையில் பிரமாண்ட மாநாடு: விஜயகாந்த் முடிவு!
சென்னை:
மதுரையைத் தொடர்ந்து சென்னையிலும் பிரமாண்டமான மாநாட்டை நடத்த நடிகர் விஜயகாந்த் முடிவு செய்துள்ளார்.
மதுரையில் செப்டம்பர் 14ம் தேதி நடந்த மாநாட்டில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற புதிய கட்சியை அறிவித்தார் விஜயகாந்த்.இதைத் தொடர்ந்து டிசம்பர் மாதம் முதல் தமிழகம் முழுவதும் உள்ள கிராமப்புறங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.அதற்கு முன்பாக சென்னையில் பிரமாண்டமான மற்றொரு மாநாட்டை நடத்த விஜயகாந்த் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. அரசியல்தலைநகர் எனக் கூறப்படும் மதுரையில் கட்சியைத் தொடங்கியுள்ளதன் மூலம் தமிழகத்தைத் தன்பக்கம் திருப்பியதைப் போல, தனதுகட்சியின் கொள்கைகள், செயல் திட்டங்கள் ஆகியவற்றை விளக்க சென்னையில் ஒரு மாநாட்டை நடத்தி அகில இந்திய அளவில் தன் மீதுகவனத்தைத் திருப்ப விஜயகாந்த் முடிவு செய்துள்ளார்.
சென்னையில் எப்போது மாநாடு நடத்தப்படும் என உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் நிச்சயம் டிசம்பருக்குள் மாநாடு நடத்தப்படலாம்என கூறப்படுகிறது. அதற்கு முன்பாக கட்சியை பலப்படுத்தும் வேலையிலும் விஜயகாந்த் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்.
முதலில், உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், ரசிகர்களுக்கு கட்சி உறுப்பினர் பதவிக்கான அடையாளச் சீட்டு வழங்கும்பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது. மொத்தம் 40 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பெயரைப் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளிலும் விஜயகாந்த் தீவிரமாக இறங்கியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications