குருப் பெயர்ச்சி: ஆலங்குடியில் பக்தர்கள் குவிந்தனர்!
ஆலங்குடி (திருவாரூர்):
கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு குரு பகவான் இடம் பெயரும் குருப் பெயர்ச்சி இன்று நடந்தது. இதையொட்டி குரு பகவானின்தலமான திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள். அத்தகைய சிறப்புப் பெற்ற குரு பகவான் கன்னி ராசியிலிருந்து, துலாம் ராசிக்கு இடம்பெயர்ந்துள்ளார். இன்று அந்த குருப் பெயர்ச்சி நடந்தது. இதையொட்டி ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் சிறப்புப் பூஜைகள்,பரிகார பூஜைகள் நடத்தப்பட்டன.காலை 8.50 மணி குரு பகவான் கன்னியிலிருந்து, துலாமுக்கு இடம் பெயர்ந்தார். குருப் பெயர்ச்சியையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள்ஆலங்குடி கோவிலுக்கு வந்து குவிந்தனர்.
பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக பல்வேறு ஏற்பாடுகளை கோவில் நிர்வாகமும், காவல்துறையும் செய்திருந்தன.
இதேபோல, தஞ்சை மாவட்டம் திட்டையில் உள்ள வசிஷ்டேஸ்வரர் கோவிலிலும் குருப் பெயர்ச்சியையொட்டி குரு பகவானுக்கு சிறப்புஅபிஷேகம், ஆராதனைகள் நடத்தப்பட்டன.
இதேபோல, சூரியனார் கோவிலிலிலும் குருப் பெயர்ச்சியையொட்டி சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன. இங்கும் ஆயிரக்கணக்கானபக்தர்கள் குவிந்திருந்தனர்.
இந்த குருப் பெயர்ச்சியால் மேஷம், மிதுனம், கன்னி, தனுசு, கும்ப ராசிக்காரர்களுக்கு பெரும் நன்மைகள் உண்டாகும் என்றும், மற்றராசிக்காரர்களுக்கு பலன்கள் குறைவாக இருக்கும் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications