மீண்டும் காங்கிரஸில் கலாட்டா!
சென்னை:
சட்டசபை காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியத்தை மாற்ற வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் திரியைக் கொளுத்திப் போட அது இப்போது பலமாக வெடிக்கத் தொடங்கியுள்ளது.
காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியிலிருந்து இறங்கியதிலிருந்தே இளங்கோவன், அதிருப்திக் கோஷ்டிகளின் தலைவராக மாறி விட்டார்.அவ்வப்போது அவர் தெரிவித்து வரும் கருத்துக்களால் கட்சிக்குள் பெரும் சலசலப்பு ஏற்பட்டு அடங்குகிறது.கருணாநிதி குறித்து அவர் ஏதோ பேசப் போக அது மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவோம் என்று திமுக மிரட்டும்அளவுக்கு கொண்டு போய் விட்டது. இந்த அமளிகள் அடங்கி சற்று காலமே ஆன நிலையில் இன்னொரு பிரச்சினைக்குப் பிள்ளையார் சுழிபோட்டுள்ளார் இளங்கோவன்.
சட்டசபை காங்கிரஸ் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் சரியாக செயல்படவில், எனவே துடிப்பான ஒருவரை தலைவராக நியமிக்கவேண்டும் என்றும், சிறை நிரப்பும் போராட்டம் நடத்தச் சொன்ன கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் மற்றவர்களுக்கு முன்னோடியாக அவர்போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைக்குச் செல்ல வேண்டும் எனவும் இளங்கோவன் கூறியிருப்பதற்கு வாசன் ஆதரவாளர்களிடையேகடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த பிரச்சினை குறித்த எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் கூறுகையில், பொதுவாக கட்சி தொடர்பான விஷயங்களை நான் வெளியில்விவாதிப்பதில்லை, கட்சிக்குள் தான் இதுகுறித்து நான் பேசுவேன். அதுதான் எனது வழக்கம். எனவே தற்போதைய பிரச்சினை குறித்தும்கருத்து கூற விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.
ஆனால் மற்ற தலைவர்களான எம்.எல்.ஏ. யசோதா (எஸ்.ஆர்.பிக்கு முன்பு இவர்தான் சட்டசபை காங்கிரஸ் தலைவராக இருந்தார்)இளங்கோவனுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். எஸ்.ஆர்.பி எப்போதுமே ஆளுங்கட்சிக்கு ஆதரவாக பேசுவதில்லை. அவர்சிறப்பாகத்தான் செயல்பட்டு வருகிறார். எனவே அவரை மாற்ற வேண்டும், சரியாக செயல்படவில்லை என்று இளங்கோவன்கூறியிருப்பது தவறான, கண்டனத்துக்குரியது. அவரை வயதானவர் என்று மறைமுகமாக கேலி செய்துள்ளார் இளங்கோவன்.
இளங்கோவன் கூறியபடியே தேர்தல் நடத்தினாலும், எஸ்.ஆர்.பி.தான் மீண்டும் ஜெயிப்பார். மேலும், எஸ்.ஆர்.பியை நியமித்தது தமிழககாங்கிரஸ் இல்லை, அகில இந்திய மேலிடம்தான் நியமித்தது. எனவே தலைவரை மாற்ற வேண்டும் என்று விரும்பினால் சோனியாகாந்தியைத்தான் இளங்கோவன் அணுக வேண்டும். அதை விடுத்து இவ்வாறு பத்திரிக்கைகள் வாயிலாக கட்சிக்குள் குழப்பம் விளைவிக்கமுயல்வது ஆரோக்கியமான அரசியல் அல்ல என்று கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications