மத்திய உதவிகளை மறுக்கும் ஜெ.: கருணாநிதி புகார்
திருநெல்வேலி:
திமுகவுக்கு நல்ல பெயர் கிடைத்து விடுமே என்ற காரணத்திற்காக மத்திய அரசு வழங்கும் பல்வேறு திட்டங்களையும், உதவிகளையும் ஏற்கமுதல்வர் ஜெயலலிதா மறுத்து வருவதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
நெல்லை மாவட்டம் கோவில்பட்டி முதல் பனகுடி வரையிலான சாலையை நான்கு வழிப் பாதையாக மாற்றும் திட்டத் தொடக்க விழாநான்குநேரி அருகே உள்ள கிருஷ்ணன்புதூர் என்ற இடத்தில் நடந்தது.இதில் கலந்து கொண்டு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் கருணாநிதி. நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், நன்றி உணர்வு அனைவரிடத்திலும்அவசியம் வேண்டும். அது இல்லாமல் போனால் நல்ல பணிகளுக்கு தடைக்கல்லாக மாறி விடும். திமுக ஆட்சியின் சாதனைகளைதனுஷ்கோடி ஆதித்தன், அப்பாவு எம்.எல்.ஏ. ஆகியோர் பாராட்டிப் பேசினர். அவர்களுக்கு எனது நன்றிகள்.
தமிழகத்திற்கு எத்தனையோ திட்டங்களை செய்ய மத்திய அரசு காத்திருக்கிறது. செய்தும் வருகிறது. ஆனால், இன்றைய அரசோ அதைஏற்கும் மன நிலையில் இல்லை. தூத்துக்குடி துறைமுகத்தை ரூ. 650 கோடியில் புதுப்பிக்க மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. ஆனால் அதைஏற்க தமிழக அரசு மறுக்கிறது.
இதுவே நான் முதல்வராக இருந்திருந்தால் வடக்கு நோக்கி ஒரு வணக்கம் செலுத்தியிருப்பேன். ஆறு கோடித் தமிழர்கள் சார்பில் நன்றிதெரிவித்திருப்பேன். திமுகவுக்கு நல்ல பெயர் வந்து விடுமே என்ற எண்ணத்தால் இதுபோன்ற பல திட்டங்களை, உதவிகளை இந்த அரசுஏற்க மறுக்கிறது.
நான்கு வழிச் சாலைப் பணிகளை விரைவில் தொடங்கி நிறைவேற்றிட வேண்டும். அடிக்கல்லை நாட்டி விட்டு பணிகளை முடிக்காவிட்டால்வருவோரெல்லாம் அதைப் பார்த்து நகைப்பர் என்றார் கருணாநிதி.
நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், அமைச்சர் டி.ஆர்.பாலு, எம்.பிக்கள் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன், தனுஷ்கோடி ஆதித்தன்,ராதிகா செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications