கேஜிபி விவகாரம்: விசாரணைக்கு பாஜக கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ரஷிய உளவு நிறுவனமான கே.ஜி.பி., காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுத்தது குறித்து விரிவானவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பாஜக துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கோரியுள்ளார்.

சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த தகவல் குறித்த உண்மையான நிலையை அறிய மக்கள் விரும்புகிறார்கள்.இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர்கள் கோருகிறார்கள். அதுவே பாஜகவின் விருப்பமும்,கோரிக்கையும் கூட.

நமது நாட்டின் அரசியல் கட்டமைப்புக்குள் ரஷிய உளவு நிறுவனம் மிகப் பெரிய அளவில் ஊடுறுவியிருப்பது பெரும் அதிர்ச்சியையும்,காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் நம்பகத் தன்மை குறித்த சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது.

கேஜிபியின் முன்னாள் உளவாளி கூறியுள்ள தகவல்களின்படி, அப்போது ஆட்சிப் பொறுப்பில் இருந்த காங்கிரஸ் கட்சி, இப்புகாருக்குவிளக்கம் அளிக்க வேண்டியது அவசியம். இந்த தகவல்கள் பொய்யானனை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர்ராஜா கூறுகிறார். அப்படி இருந்தால் புத்தகம் எழுதியவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க அவர்கள் தயாரா?

3 நாள் பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் மூலம், மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் தோல்விகளை மக்களிடம் விளக்கவேண்டும் என தொண்டர்களுக்கு செய்தி வழங்கப்பட்டுள்ளது. செயற்குழுக் கூட்டம் மிகவும் வெற்றிகரமாக முடிந்துள்ளது.

அத்வானி இப்போதும் கட்சித் தலைவராகவே இருக்கிறார். எனவே அவருக்கு அடுத்து யார் தலைவர் என்ற பிரச்சினை இப்போதுஎழவில்லை என்றார் வெங்கய்ய நாயுடு.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+