தமிழக பஸ் எரிப்பு: மதானி கட்சி பிரமுகர் கைது
கொச்சி:
தமிழக அரசுப் பேருந்து கேரளாவில் எரிக்கப்பட்டது தொடர்பாக மக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஒருவரை கேரள போலீஸார் கைதுசெய்துள்ளனர்.
கொச்சியிலிருந்து சேலம் செல்வதற்காக கிளம்பிய தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்து, கடந்த வாரம் எர்ணாகுளம் அருகேசிலரார் கடத்தப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டது.கோவை குண்டு வெடிப்புச் சம்பவத்தில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள கேரளாவைச் சேர்ந்த மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர்அப்துல் நாசர் மதானியின் ஆதரவாளர்கள்தான் இந்த கொடும் செயலைச் செய்தவர்கள் என போலீஸார் சந்தேகித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக நூற்றுக்கணக்கானோரிடம் கேரள போலீஸ் தனிப்படை விசாரணை நடத்தி வந்தது. இந்த நிலையில் மக்கள்ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஷெரீப் என்பவரை போலீஸார் தற்போது கைது செய்துள்ளனர். இவர் மக்கள் ஜனனாயகக் கட்சியின்அலுவா பகுதி செயலாளராக இருக்கிறார்.
தானும், மக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த சிலரும்தான் பேருந்தைக் கடத்தித் தீவைத்து எரித்ததாக ஷெரீப் ஒத்துக் கொண்டுள்ளதாகபோலீஸார் தெரிவித்துள்ளனர். மதானியின் விடுதலையைக் கோரி இவ்வாறு செய்ததாக ஷெரீப் கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து மற்ற குற்றவாளிகளையும் கைது செய்ய போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். பேருந்து எரிப்புச் சம்பவத்தில்தங்களது கட்சிக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று மதானி கட்சியினர் மறுத்த வந்தனர். இந்த நிலையில் அக்கட்சியின் முக்கியப்பிரமுகர் ஒருவர், தாங்கள்தான் பேருந்துக்கு தீவைத்தோம் என ஒத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications