ஜெ. குறித்து அவதூறு பேச்சு: பாமக எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீது வழக்கு
திண்டிவனம்:
கல்வி அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்ட அதிமுக பொதுக் கூட்டத்தில் புகுந்து கலாட்டா செய்ததோடு, முதல்வர் ஜெயலலிதாகுறித்து தரக்குறைவாக பேசியதாக பாமக எம்.பி. தனராஜ், எம்.எல்.ஏக்கள் வேல்முருகன், எடப்பாடி கணேசன் உள்ளிட்ட 9 பேர் மீதுபோலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
திண்டிவனம் பகுதியில் சமீபத்தில் நடந்த பாமக பொதுக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவையும், கல்வி அமைச்சர் சி.வி.சண்முகத்தையும்தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அதிமுக சார்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும்அவரது மகன் அன்புமணி ஆகியோரை அதிமுக பிரமுகர்கள் கடுமையாக விமர்சித்துப் பேசினர்.இதனால் கோபமடைந்த பாமகவினர் பொதுக் கூட்டத்திற்குள் புகுந்து கலாட்டாவில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா,அமைச்சர் சண்முகம் ஆகியோரை தரக்குறைவாக பேசியும், அதிமுக பொதுக் கூட்டத்தில் புகுந்து கலாட்டா செய்ததாகவும் கூறிதிண்டிவனம் பாமக எம்.பி. தன்ராஜ், பண்ருட்டி எம்.எல்.ஏ. வேல்முருகன், இடைப்பாடி எம்.எல்.ஏ. கணேசன் ஆகியோர் மீது திண்டிவனம்நகர அதிமுக செயலாளர் தேவநாதன் போலீஸில் புகார் கொடுத்தார்.
இந்தப் புகாரின் பேரில், 4 பாமகவினரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், தன்ராஜ், வேல்முருகன், கணேசன் உள்ளிட்ட 9 பேர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து திண்டிவனத்தில் பதட்டம் நிலவி வருவதால் அங்கு அதிக அளவில் போலீஸார்குவிக்கப்பட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications