சுனாமி நிதி: ரூ. 15 கோடி மோசடி - நடிகர் கொடுத்த செக்கும் திரும்பியது!
சென்னை:
சுனாமி நிவாரண நிதிக்காக தமிழக அரசிடம் வழங்கப்பட்ட ரூ. 15 கோடி மதிப்பிலான காசோலைகள் சம்பந்தப்பட்டவர்களின் கணக்குகளில்பணம் இல்லாததால் திரும்பி வந்து விட்டன. இதில் தமிழக முன்னணி நடிகர் ஒருவரின் காசோலையும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த சுனாமி தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக தமிழக அரதசிடம் ஏராளமானோர்சுனாமி நிவாரண நிதியை வழங்கினர். அனைவருமே காசோலைகளாக தந்தனர். பலர் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் பார்த்து அவரிடம்தங்களது காசோலைகளைத் தந்தனர்.கிட்டத்தட்ட ரூ. 100 கோடி வரை சுனாமி நிதிக்காக முதல்வரிடம் வழங்கப்பட்டது. முதல்வரிடம் வழங்கப்பட்ட மற்றும் தலைமைச்செயலகத்திற்கு வந்து சேர்ந்த காசோலைகளை தமிழக அரசு வங்கியில் போட்டது. அதில், ரூ. 15 கோடிக்கான காசோலைகள்சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்கில் பணம் இல்லாமல் திரும்பி வந்து விட்டன.
இதில் பிரபல நடிகர் ஒருவர் வழங்கிய ரூ. 5 லட்சத்துக்கான காசோலையும் அடங்கும். நடிகர்கள் விஜய், அஜீத், பிரஷாந்த் ஆகியோர் தலாரூ. 5 லட்சம் கொடுத்தனர். விஜயகாந்த் ரூ. 10 லட்சம் கொடுத்தார்.
காசோலை திரும்பி வந்தவர்களிடம் விளக்கம் கேட்டு தமிழக அரசு கடிதம் அனுப்பியுள்ளது. காசோலை திரும்பி வந்த விவகாரம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications