இலங்கையிலிருந்து மீண்ட 4 ராமேஸ்வரம் மீனவர்கள்!
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்:
இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் அங்கிருந்து விடுதலையாகி ராமேஸ்வரம் வந்துசேர்ந்தனர்.ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதியைச் சேர்ந்த மீனவர்களான ராஜீவ் காந்தி, ராஜேஷ், சந்திரன், அற்புதக் கனி ஆகியோர்கடந்த செப்டம்பர் 11ம் தேதி கார்த்திக் என்பவருக்குச் சொந்தமான படகில் ஏறி மீன் பிடிக்கச் சென்றனர்.
நடுக்கடலில் ஒரு பாறையில் இவர்களது படகு சேதமடைந்தது. கடலில் தத்தளித்த அவர்களை இலங்கை மீனவர்கள் மீட்டுகடற்படையிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய இலங்கை கடற்படையினர், இந்தியக் கடற்படையிடம்ஒப்படைக்க நடவடிக்கை எடுத்தனர்.
கிட்டத்தட்ட எட்டு நாட்களுக்குப் பிறகு நான்கு பேரையும் இந்தியக் கடற்படையிடம் இலங்கை கடற்படையினர் ஒப்படைத்தனர்.விசாரைணக்குப் பின்னர் நான்கு மீனவர்களும் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications