நக்கீரன் கோபால் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்
பூவிருந்தவல்லி:
நக்கீரன் கோபால் மீதான பொடா வழக்கில் பூவிருந்தவல்லி பொடா சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2003ம் ஆண்டு ஏப்ரல் 11ம் தேதி நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டார். தமிழ்த் தீவிரவாத அமைப்புடன் தொடர்புவைத்திருந்ததாகவும், அனுமதி இல்லாமல் துப்பாக்கி போன்ற ஆயுதங்களை வைத்திருந்ததாகவும் கூறி கோபால் மீது பொடா சட்டத்தின் கீழ்வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.பொடா சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்ததை எதிர்த்து கோபால் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். அதை விசாரித்தஉயர்நீதிமன்றம் பொடா சட்டத்தின் கீழ் கோபால் கைது செய்யப்பட்டது செல்லாது என்று உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசுஉச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத்தடை விதித்தது. மேலும், கோபால் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவும் தமிழக அரசுக்கு அனுமதி அளித்தது.
இதைத் தொடர்ந்து சிபிசிஐடி போலீஸார் 100 பக்க குற்றப்பத்திரிக்கையை பொடா நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையைநீதிபதி ஏற்றுக் கொண்டார். இதையடுத்து விரைவில் கோபாலுக்கு குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டு இந்த வழக்கு மீதான விசாரணைதொடங்கும் எனத் தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications