ஆசிரியை மீனாட்சி வழக்கு: வாலிபர், மாணவியிடம் விசாரணை
திருச்சி:
குளித்தலை ஆசிரியை மீனாட்சி காணாமல் போன வழக்கில் திடீர் திருப்பமாக புதிதாக 3 பேரிடம் போலீஸார் விசாரணைமேற்கொண்டுள்ளனர். அவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனையை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குளித்தலை ஆசிரியை மீனாட்சி காணாமல் போன வழக்கு தமிழகத்தில் பரபரப்பான வழக்குகளில் ஒன்றாக மாறியுள்ளது. அவர்காணாமல் போய் ஒரு ஆண்டு முடியப் போகிறது. அவர் எங்கு போனார், என்ன ஆனார் என்பது குறித்து இதுவரை ஒரு துப்பும்கிடைக்கவில்லை. மதுரை உயர்நீதிமன்றக் கிளை இந்த வழக்கில் இறுதி முடிவுக்கு வர இம்மாதம் 30ம் தேதி வரை சிபிசிஐடிபோலீஸாருக்கு கெடு விதித்துள்ளது.இந்த வழக்கில் அதிமுக எம்.எல்.ஏ. பாப்பா சுந்தரத்தின் பெயர் முக்கியமாக அடிபடுவதால் வழக்கின் போக்கை தமிழகத்தில்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இவ்வழக்கு தொடர்பாக புதிதாக 3 பேரிடம் போலீஸார் விசாரணைமேற்கொண்டுள்ளனர்.
மீனாட்சி காணாமல் போன சில நாட்களில் அவரைத் திருச்சியில் பார்த்ததாக திருச்சியைச் சேர்ந்த வாலிபர் ஜெகதீசன் என்பவர்சிபிசிஐடி போலீஸாரிடம் கூறியுள்ளார். அதேபோல அவரை திருச்சியில் பார்த்ததாக மாணவி மாதவி, விவசாயி சின்னையன்ஆகியோரும் தெரிவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்திய போலீஸார், அவர்களை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தமுடிவு செய்துள்ளனர். விரைவில் இதற்காக அவர்களை பெங்களூருக்குக் கொண்டு செல்லவும் போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications