தமிழகத்தில் கூட்டணி ஆட்சி வர வேண்டும்: சோ.பா.
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் தமிழகத்தில் வருகிற சட்டசபைத் தேர்தலுக்குப் பின்னர் கூட்டணி ஆட்சி அமைந்தால்நல்லது என்று முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோ.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சாலை விபத்தில் சிக்கி காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த சோ.பாலகிருஷ்ணன், இன்று சட்டசபைக் கூட்டத் தொடர்தொடங்குவதால், கையெழுத்துப் போடுவதற்காக சென்னை அழைத்து வரப்பட்டுள்ளார்.சட்டசபை உறுப்பினர் விடுதியில் தங்கியுள்ள அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கூட்டணி ஆட்சி என்பது மத்தியில்இனிமேல் கட்டாயமாகி விட்டது. தற்போது மன்மோகன் சிங் தலைமையில் கூட்டணி ஆட்சி மிகச் சிறப்பாக செயல்பட்டுவருகிறது. அதேபோல மாநில அளவிலும் கூட்டணி ஆட்சி அமைவதில் தவறில்லை.
தமிழகத்தைப் பொருத்தவரை திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் கூட்டணி ஆட்சி அமைவதை நான் வரவேற்கிறேன்,விரும்புகிறேன். இது அனைவருக்கும் பொருத்தமாக இருக்கும், காங்கிரஸ்காரர்களின் விருப்பமும் இதுதான்.
இந்தக் கூட்டணி ஆட்சியில் திமுக, காங்கிரஸ், மதிமுக, பாமக, கம்யூனிஸ்டுகள் என அனைவரும் இடம்பெறலாம்.
வாய்ப்பு கிடைக்கும்போது இதுகுறித்து கருணாநிதியிடம் பேசவுள்ளேன். சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளது.எனவே இதுகுறித்து யோசிக்கவும் அவகாசம் உள்ளது.
காங்கிரஸ் கட்சியில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் பத்திரிக்கைகள் மூலமாக விவாதிக்கப்படுவது வேதனையைத் தருகிறது.நீண்ட பாரம்பரியம் உள்ள காங்கிரஸ் கட்சியில் இதுபோன்ற பூசல்கள் நிலவுவதைக் கேட்கும்போதே சங்கடமாக இருக்கிறதுஎன்றார் சோ.பாலகிருஷ்ணன்.
தான் இனிமேல் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை, இதுவே எனது கடைசி சட்டசபைக் கூட்டம் என்றும் ஒருகேள்விக்கு சோ.பா. பதிலளித்தார்.
தமிழ் மாநில காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியுடன் இணைந்தபோது, ஒருங்கிணைந்த காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோ.பா. தேர்வுசெய்யப்பட்டார். அதற்கு முன்பாக அவர் சட்டசபை தமாகா தலைவராகவும் இருந்துள்ளார்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications