கர்நாடகம் பிடிவாதம்: ஹோகனேக்கலில் தொடரும் பதட்டம்!
ஹோகனேக்கல் (தர்மபுரி):
ஹோகனேக்கல் அருவிப் பகுதியில் உள்ள பல பகுதிகள் தங்களுக்கே சொந்தம் என கர்நாடக அரசின் வனத்துறை அதிகாரிகள்தொடர்ந்து பிடிவாதம் பிடித்து, அப்பகுதிக்கு யாரும் வரக் கூடாது என்று மிரட்டி வருவதால், ஹோகனேக்கல் பகுதியில்தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது.
தமிழக, கர்நாடக எல்லையில் உள்ளது ஹோகனேக்கல் அருவிகள். இது தமிழக எல்லைக்குள் உள்ளது. இங்குதான் காவிரி ஆறுதமிழகத்திற்குள் காலடி எடுத்து வைக்கிறது.சமீபத்தில் தமிழக பகுதியைச் சேர்ந்த அருவிப் பகுதியில் படகு ஓட்டிச் சென்ற தமிழக படகோட்டிகளை கர்நாடகவனத்துறையினர் பிடித்து அபராதம் விதித்தனர். ஏன் என்று கேட்டதற்கு கர்நாடக எல்லை இது, இங்கு வரக் கூடாது என்று கூறிஅவர்களை மிரட்டி அனுப்பினர். இதுதொடர்பாக படகோட்டிகள் கொடுத்த புகாரின் பேரில், தமிழக போலீஸார் கர்நாடகபோலீஸார் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தையடுத்து பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. தமிழகத்திற்குள் உள்ள சில பகுதிகளை தங்களுக்கே சொந்தம் எனகர்நாடக வனத்துறை கூறி வருகிறது. அங்கு எந்தவிதமான வளர்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளக் கூடாது என அவர்கள் தமிழகஅதிகாரிகள், படகோட்டிகள், பொதுமக்களை மிரட்டி வருகின்றனர்.
பிரச்சினை பெரிதாவதை உணர்ந்த தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் சுதீப் ஜெயின் உள்ளிட்ட அதிகாரிகள், கர்நாடகஅதிகாரிகளை வரவழைத்து, ஹோகனேக்கல் அருவிப் பகுதியின் வரைபடத்தைக் காட்டி அவை அனைத்தும் தமிழகஎல்லைக்குள் உள்ளதை விளக்கினர். ஆனால் கர்நாடக அதிகாரிகள் அதை ஏற்க மறுத்து விட்டனர்.
இதைத் தொடர்ந்து இரு மாநில அதிகாரிகளின் முன்னிலையில் சர்வே எடுக்கும் பணி நடந்தது. இந்தப் பணி முடிவடைந்தநிலையில் சர்வே முடிவுகளை ஏற்க கர்நாடக அதிகாரிகள் மறுத்துள்ளனர். கர்நாடக மாநிலத்தின் சாம்ராஜ் நகர் மாவட்ட ஆட்சித்தலைவர் சசிதரன், அம்மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் மற்றும் ஆயுதம் தாங்கிய போலீஸாருடன் ஹோகனேக்கல்வந்தார்.
அங்கு தர்மபுரி மண்டல உதவி வன பாதுகாப்பு அலுவலர் லோகநாதனை சந்தித்தார். சர்வேயை நாங்கள் ஏற்க மாட்டோம்.சர்ச்சைக்குரிய பகுதி கர்நாடகத்திற்குத்தான் சொந்தம். எனவே அங்கு தமிழக அரசு சார்பிலோ, தனிப்பட்ட முறையிலோஎந்தவிதமான வளர்ச்சிப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என்று மிரட்டலாக கூறினார்.
அதற்கு லோகநாதன், மைசூர் மலைப் பகுதி முழுவதும் எங்களுக்குத்தான் சொந்தம் என்றால் நீங்கள் உடனே ஏற்றுக்கொள்வீர்களா.? அதைப்போலத்தான் தமிழக பகுதிகளும். திடீரென நீங்கள் வந்து இது எங்களுக்கு சொந்தம் என்றால் எப்படிஏற்றுக் கொள்ள முடியும்? சர்வே எடுத்தபோது நீங்கள் கூறியதை விட 3 மீட்டர் அளவுக்கு எல்லையில் வித்தியாசம் இருந்தது.அதுகுறித்து மட்டும்தான் நீங்கள் பேச முடியுமே தவிர, உரிமை எல்லாம் கொண்டாட முடியாது என்று கண்டிப்புடன் கூறினார்.
இருப்பினும் தாங்கள் சொன்னதையே திருப்பிச் சொல்லி விட்டு கர்நாடக அதிகாரிகள் சென்று விட்டனர். இந்தப்பிரச்சினையையடுத்து ஹோகனேக்கல் மற்றும் சர்ச்சைக்குரிய பகுதிகளில் தமிழக போலீஸார் அதிக அளவில்குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications