வந்தார், கையெழுத்துப் போட்டார், கிளம்பினார்!
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதி சட்டசபைக்கு வந்து வருகைப் பதிவேட்டில் கையெழுத்துப் போட்டு விட்டு கிளம்பிச் சென்றார்.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த நான்கு ஆண்டுகளாக சட்டசபைக் கூட்டத் தொடர் எதிலும் கலந்து கொண்டு, விவாதங்களில்பங்கேற்கவில்லை. ஒரே ஒரு முறை மட்டுமே அவர் சட்டசபைக்குள் வந்து அமர்ந்தார். அமர்ந்த சில நிமிடங்களிலேயே கிளம்பிச்சென்று விட்டார்.ஒவ்வொரு முறை சட்டசபை கூடும்போதும் அவர் சட்டசபை வளாகம் வரை வந்து வருகைப் பதிவேட்டில் கையெழுத்துப் போட்டுவிட்டுச் சென்று விடுவார். சட்டசபை உறுப்பினர்கள் தொடர்ந்து மூன்று தொடர்களில் கலந்து கொள்ளாமல் இருந்தால் பதவி பறிபோய் விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சட்டசபை மழைக்காலக் கூட்டத் தொடர் புதன்கிழமை காலை தொடங்கியது. இதையடுத்து கருணாநிதி இன்றுசட்டசபைக்கு வந்தார். அவரை திமுக, பாமக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் வரவேற்று உள்ளே அழைத்துச்சென்றனர்.
வளாகத்தில் இருந்த உறுப்பினர் வருகைப் பதிவேட்டில் கருணாநிதி கையெழுத்துப் போட்டார். பின்னர் கூடியிருந்தஎம்.எல்.ஏக்களிடம் பேசி விட்டு அங்கிருந்து கிளம்பினர். அப்போது செய்தியாளர்கள் சிலர், திமுக பெண்கள் பேரணியின்போதுசில பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டது குறித்து நீங்கள் கருத்துக் கூறுகையில், சமூகவிரோதிகள் என வர்ணித்துள்ளீர்கள்.இதுதொடர்பாக பத்திரிக்கையாளர்கள் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். அதுகுறித்து என்ன சொல்லவிரும்புகிறீர்கள் என்று கேட்டனர்.
அதற்கு கருணாநிதி, பெண்களிடம் விஷமம் செய்பவர்கள் சமூக விரோதிகள்தானே? நான் சமூக விரோதிகள் குறித்துத்தான்கருத்துக் கூறினேன் என்று கூறி விட்டுக் கிளம்பினார்.
இதேபோல உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோ.பாலகிருஷ்ணனும் இன்று சட்டசபைக்குவந்தார். சக்கர நாற்காலியில் அவர் அழைத்து வரப்பட்டிருந்தார். விபத்தில் சிக்கி நடக்க முடியாத நிலையில் அவர் உள்ளதால்,சட்டசபைக்குள் வராமல் காரில் இருந்தபடியே அவர் கையெழுத்துப் போட சபாநாயகர் காளிமுத்து அனுமதித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து அவரது காருக்கு வருகைப் பதிவேடு எடுத்துச் செல்லப்பட்டு அவரிடம் கைநாட்டு பெறப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications