நிதி நிறுவனம் ரூ. 10 லட்சம் மோசடி: புஷ்பவனம் குப்புசாமி புகார்!
நாகப்பட்டனம்:
வேதாரண்யத்தைச் சேர்ந்த நிதி நிறுவன அதிபர் ரூ. 10 லட்சம் பணத்தை மோசடி செய்து விட்டதாக கூறி பிரபல நாட்டுப்புற பாடகர்புஷ்பவனம் குப்புசாமி போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்தவர் குப்புசாமி. பிரபலமான நாட்டுப்புறப்பாடகர். இவரது மனைவி அனிதா குப்புசாமியும் நாட்டுப்புறப் பாடகி ஆவார். நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் பிரபலமானபுஷ்பவனம் குப்புசாமி, பல திரைப்படங்களிலும் பாடியுள்ளார்.இந்த நிலையில் புஷ்பவனம் குப்புசாமி நாகை மாவட்ட காவல்துறையில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், வேதாரண்யம்அருகே உள்ள தோப்புத்துறை என்ற இடத்தில் சுவாமிநாதன் என்பவர் கடந்த 36 ஆண்டுகளாக நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.
அவரிடம் ரூ. 10 லட்சம் முதலீடு செய்திருந்தேன். ஆனால் சுவாமிநாதன் எனது பணத்தை மோசடி செய்து விட்டுத்தலைமறைவாகி விட்டார். அவரிடம் முதலீடு செய்த எனது பணத்தைத் திரும்பப் பெற்றுத் தருமாறு கூறியுள்ளார்.
தலைமறைவான சுவாமிநாதன், புஷ்பவனம் குப்புசாமியைப் போல 6000 பேரிடம் (கிட்டத்தட்ட ஊரையை கொள்ளைஅடித்துள்ளார்!) பண மோசடி செய்துள்ளார் சுவாமிநாதன். பல கோடி ரூபாய் அளவுக்கு சுவாமிநாதன் சுருட்டி விட்டுத்தலைமறைவானார்.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்டவர்களில் 2500 பேர் போலீஸில் புகார் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் திருச்சிநீதிமன்றத்தில் சுவாமிநாதன் சரணடைந்தார். தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
படிக்காத பாமர மக்கள்தான் மோசடி நிதி நிறுவனங்களில் பணத்தைப் போட்டு ஏமாறுகிறார்கள் என்றால், பல பேரிடம் பழகும்,நாட்டு நடப்புகளை நன்கு அறியும் வாய்ப்பைப் பெற்ற புஷ்பவனம் குப்புசாமியும் மோசடி நிதி நிறுவனத்தில் தனது பணத்தைஏமாந்து நிற்பது வியப்பாக உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications