இலங்கையில் அவசர நிலை நீட்டிப்பு
கொழும்பு:
நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இலங்கையில் அவசர நிலை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வெளியுறவு அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் படுகொலைக்குப் பின்னர் நாட்டில் அவசர நிலை பிரகடனம்செய்யப்பட்டது. இந்த நிலையில், இலங்கை நாடாளுமன்றம் அவசரமாக கூடி அவசர நிலையை மேலும் ஒரு மாதத்திற்குநீட்டித்துள்ளது.அவசர நிலைக்கு நீட்டிப்புக்கு ஆதரவாக 118 வாக்குகளும், எதிராக 24 வாக்குகளும் பதிவாகின. இதன்படி, போலீஸார் மற்றும்ராணுவத்தினருக்கு கூடுதல் அதிகாரம் கிடைத்துள்ளது. சந்தேகப்படும் எவரையும், எத்தனை நாட்களுக்கு வேண்டுமானாலும்தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்க அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தனி நபர் சுதந்திரணிம்கட்டுப்படுத்தப்படும்.
அவசர நிலை நீட்டிப்புக்கு தமிழ் எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும் நாடாளுமன்றத்தில்பெரும்பான்மையாக உள்ள ஆளுங்கட்சி, எதிர் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி ஆகியவை தீர்மானத்திற்கு ஆதரவாக ஓட்டுப்போட்டதால் அவசர நிலை நீட்டிப்பு தீர்மானம் வெற்றி பெற்றது.
இலங்கையில் நவம்பர் மாதம் 17ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் அவசர நிலை பிரகடனம்செய்யப்பட்டிருப்பது தமிழர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கதிர்காமர் படுகொலைக்குப் பின்னர் 10நாட்களுக்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது நினைவிருக்கலாம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications