வீரப்பன் காட்டில் நக்சல்கள் இல்லை: டி.எஸ்.பி. மறுப்பு
சத்தியமங்கலம்:
வீரப்பன் நடமாடிய சத்தியமங்கலம் வனப் பகுதிக்குள் நக்சலைட்டுகள் யாரும் ஊடுறுவவில்லை என்று சத்தியமங்கலம்டி.எஸ்.பி. மோகன் நவாஸ் கூறியுள்ளார்.
கர்நாடக வனப் பகுதியில் பதுங்கியிருந்த நக்சலைட்டுகள், வீரப்பன் நடமாடி வந்த சத்தியமங்கலம் வனப்பகுதிக்குள்ஊடுறுயுள்ளதாக கர்நாடக முதல்வர் தரம்சிங் கூறியுள்ளார். மேலும், நக்சலைட்டுகள், கர்நாடகப் பகுதிக்குள் வந்தால் சுட்டுவீழ்த்தப்படுாவர்கள் என்றும் அவர் கூறியிருந்தார்.இதுகுறித்து சத்தியமங்கலம் டி.எஸ்.பி. மோகன் நவாஸ் கூறுகையில், வீரப்பன் கொல்லப்பட்ட பிறகு சத்தியமங்கலம் உள்ளிட்டவீரப்பன் முன்பு நடமாடிய அனைத்து வனப் பகுதிகளையும் தமிழக அதிரடிப்படையினர் தங்களது முழுக் கட்டுப்பாட்டிற்குள்வைத்துள்ளனர்.
அதிரடிப்படையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதால், காட்டுக்குள் யாரும் ஊடுறுவ வாய்ப்பில்லை. வனப்பகுதியில்எந்தவிதமான சட்டவிரோத செயல்களும் நடைபெறாமல் உஷார் நிலையில் அதிரடிப்படையினர் கண்காணித்து வருகின்றனர்.
அதிரடிப்படையினரின் இன்பார்மர்கள் காட்டுப் பகுதிகளில் நிகழும், நிகழ்வுகள் குறித்து தொடர்ந்து எங்களுக்குத் தகவல்கொடுத்தவண்ணம் உள்ளனர். தற்போது திம்மம் பகுதியில் அதிரடிப்படை சிறப்பு முகாம் உள்ளது. மேலும், தட்டக்கரைபகுதியிலும் அதிரடிப்படை சிறப்பு முகாம் உள்ளது.
இப்படிப்பட்ட நிலையில், மிகச் சாதாரண வனக் குற்றங்கள் நடக்க மட்டுமே வாய்ப்பு உள்ளது. நக்சலைட்டுகள் யாரும் இதுவரைஊடுறுவவில்லை. தொடர்ந்து வனப் பகுதிகளில் தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார் மோகன் நவாஸ்.
வீரப்பன் கொல்லப்பட்ட பிறகு அதிரடிப்படை வீரர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டு விட்டது. தற்போது மொத்தம்150 பேர் மட்டுமே காட்டுப் பகுதியில் உள்ள முகாம்களில் தங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications