விஜயகாந்த் கட்சியில் சேர்ந்தது ஏன்? பண்ருட்டி விளக்கம்!
சென்னை:
ஏழை, எளிய மக்கள் விஜயகாந்த்துடன் இருக்கிறார்கள். அதனால்தான் அவரது கட்சியில் இணைந்தேன் என்று முன்னாள்அமைச்சரும், எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்கு பாத்திரமானவராக விளங்கியவருமான பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
விஜயகாந்த்தின் அரசியல் நடவடிக்கைகளுக்கு பின்னணியில் பண்ருட்டி ராமச்சந்திரன் முக்கிய காரணமாக இருந்து வருகிறார் எனமுன்பு கூறப்பட்டது. அதை நிரூபிக்கும் வகையில் தற்போது விஜயகாந்த் கட்சியில் சேர்ந்துள்ளார் பண்ருட்டி ராமச்சந்திரன்.இதன் மூலம் எம்.ஜி.ஆரின் ஆரம்ப கால நண்பர்கள், ரசிகர்களை இழுக்கும் விஜயகாந்த்தின் திட்டம் தெளிவாகியுள்ளது.விஜயகாந்த்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தில் இணைந்தது குறித்து பண்ருட்டி ராமச்சந்திரன் கூறுகையில், நான்ஏழைகளுக்கு உதவுவதில் ஆர்வம் கொண்டவன். ஏழைகள், எளியவர்கள், சமூகத்தின் அடித்தட்டில் இருப்பவர்கள் அனைவரும்விஜயகாந்த்துடன்தான் இருக்கிறார்கள்.
எனவேதான் நான் விஜயகாந்த்தின் கட்சியில் இணைந்துள்ளேன். அவருடன் இணைந்து தமிழகத்தில் வறுமை, வேலையில்லாத்திண்டாட்டத்தை ஒழிக்கப் பாடுபடப் போகிறேன் என்றார் பண்ருட்டி ராமச்சந்திரன்.
எம்.ஜி.ஆர். அமைச்சரவையின் முக்கியமான மூளைகளில் ஒருவராக திகழ்ந்தவர் பண்ருட்டி ராமச்சந்திரன். 1985ம் ஆண்டுஇலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்தபோது, இந்தியாவிலிருந்து ஐ.நா. சபைக்கு ஒரு தூதுக்குழுஅனுப்பப்பட்டது. அதில் பண்ருட்டி ராமச்சந்திரனும் இடம் பெற்றிருந்தார்.
எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் பல முக்கியத் துறைகள் இவர் வசம் கொடுக்கப்பட்டன. எம்.ஜி.ஆர். எடுத்த பல முக்கியநடவடிக்கைகளுக்கு பண்ருட்டி ராமச்சந்திரன் பெரும் உதவியாக இருந்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications