தயாரிப்பாளர்-நடிகர் மோதல்: முற்றுப்புள்ளி வைக்க சரத் முயற்சி!
சென்னை:
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், நடிகர் சங்கத்திற்கும் இடையே நிலவி வரும் பனிப்போரை முடிவுக்குகொண்டு வரும் வகையில், நடிகர் சங்கச் செயலாளர் சரத்குமார், இன்னொரு செயலாளர் நெப்போலியன் ஆகியோர்தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுடன் ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
நடிகர் மாதவன் விவகாரத்தில் தயாரிப்பாளர் சங்கத்திற்கும், நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த்திற்கும் இடையே மோதல்மூண்டது. மாதவன் தயாரிப்பாளர்கள் குறித்துத் தெரிவித்த கருத்தையடுத்து அவருக்கு தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது.இதை கடுமையாக எதிர்த்த விஜயகாந்த், தயாரிப்பாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த சில நிர்வாகிகள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றுகோரினார். ஆனால் அதை நிராகரித்த தயாரிப்பாளர் சங்கம், விஜயகாந்த்தான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றுதிட்டவட்டமாக கூறியது.
இந்த நிலையில், தங்கர் பச்சான் விவகாரம் வெடித்தது. இதைப் பயன்படுத்திக் கொண்ட விஜயகாந்த், தங்கர் பச்சானை நடிகர்சங்கத்திற்கு வரவழைத்து மன்னிப்பு கேட்க வைத்தார். இந்த விவகாரத்தால், தயாரிப்பாளர் சங்கத்திற்கும், நடிகர் சங்கத்திற்கும்இடையே பெரும் போர் வெடிக்கும் சூழ்நிலை எழுந்துள்ளது.
சரியான சந்தர்ப்பத்திற்காக தயாரிப்பாளர்கள் சங்கம் காத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இம்மோதலுக்குமுற்றுப்புள்ளி வைக்க நடிகர் சங்க செயலாளர்களான சரத்குமார், நெப்போலியன் ஆகியோர் முடிவு செய்தனர்.
இதைத் தொடர்ந்து சரத்குமாரின் அழைப்பின் பேரில் தயாரிப்பாளர்கள் அழகப்பன் (திமுகவைச் சேர்ந்தவர்), சேலம்சந்திரசேகரன், அன்பாலயா பிரபாகரன், ஏ.எம்.ரத்னம் ஆகியோர் சரத்குமாருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில்நெப்போலியனும் கலந்து கொண்டார்.
இந்த சந்திப்பின்போது, விஜயகாந்த் அடாவடியாகவும், எதேச்சதிகாரப் போக்குடனும் நடந்து கொள்வதாக தயாரிப்பாளர்கள்தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. அவர்களை சமாதானப்படுத்திய சரத்குமார், எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சினை வராமல் தான்பார்த்துக் கொள்வதாகவும், தற்போதைக்கு சமரசமாக போய் விடுமாறும் கேட்டுக் கொண்டார்.
சரத்குமாரின் உறுதிமொழியை ஏற்றுக் கொண்ட தயாரிப்பாளர்கள் தரப்பு, விஜயகாந்த்தால் இனிமேல் ஏதாவது பிரச்சினைஎன்றால் தயாரிப்பாளர்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள், மிகப் பெரிய நடவடிக்கையை சந்திக்கவும் அவர்கள் தயாராகஇருக்கிறார்கள் என்று எச்சரிக்கையுடன் கூடிய பதிலைத் தந்துள்ளனர்.
விஜயகாந்த்தால் ஏற்பட்ட பிரச்சினைக்கு முடிவு கட்ட சரத்குமார் தனிப்பட்ட முறையில் இந்த ஆலோசனையை மேற்கொண்டதாககூற்பபடுகிறது. மேலும், விஜயகாந்த் அரசியலில் பிசியாகி வருவதால் விரைவில் அவர் நடிகர் சங்கப் பதவியிலிருந்து விலகக்கூடும் அல்லது அதற்கான நெருக்கடிகள் கொடுக்கப்படும் எனத் தெரிகிறது.
விஜயகாந்த் விலகும்பட்சத்தில் நடிகர் சங்கத் தலைவர் பொறுப்புக்கு சரத்குமார் வரக் கூடும் என்று தெரிகிறது. விஜயகாந்த்தைப்போல அதிரடியான தலைவராக சரத்குமார் இருக்க மாட்டார் என்பதாலும், அனைவரையும் அனுசரித்து நடந்து கொள்பவர்என்பதாலும் சரத்குமாரைத் தலைவர் பதவியில் அமர்த்த தயாரிப்பாளர் சங்கமும் விருப்பத்துடன் உள்ளதாக கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications