திருமாவளவனுக்கு தே.மு.தி.க. எச்சரிக்கை!
சென்னை:
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பேனர்கள், கொடிக் கம்பங்களை சிதைக்கும் வேலையில் தொடர்ந்து விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பு ஈடுபட்டால் அதை அமைதியான வழியில், காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுப்போம் என்றுதேசிய முற்போக்க திராவிட கழக பொதுச் செயலாளர் ராமு வசந்தன் கூறியுள்ளார்.
விஜயகாந்த் ரசிகர்களுக்கும், விடுதலைச் சிறுத்தைகள் தொண்டர்களுக்கும் இடையே தமிழகத்தின் வட பகுதிகளில் அடிக்கடிமோதல் நடந்து வருகிறது. இரு தரப்பினரும் எதிர் தரப்பினரின் கட்சிக் கொடிகள், பெயர்ப் பலகைகள், பேனர்களை தாக்கிசேதப்படுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவாகியுள்ளன.இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினருக்கு தே.மு.தி.க. பொதுச் செயலாளர் ராமு வசந்தன் எச்சரிக்கைவிடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், எங்களது தலைவர் விஜயகாந்த் கட்சி ஆரம்பிக்கப் போவதாகஅறிவித்தவுடனேயே வன்முறையில் இறங்கி விட்டார் திருமாவளவன். எங்களுக்கு எதிராக கடுமையாக பேசி வரும் அவர் தனதுகட்சி தொண்டர்களை வன்முறையில் ஈடுபடுத்தி வருகிறார்.
அவரது தூண்டுதலின் பேரில்தான் சென்னை கே.கே.நகரில் எங்களது மன்றக் கொடிக் கம்பம் வெட்டப்பட்டது, கொடிகள்கிழிக்கப்பட்டன, பேனர்கள் சிதைக்கப்பட்டன.
இப்படிச் செய்வதன் மூலம் எங்களை அச்சுறுத்த அவர் முயலுகிறார். இதற்கெல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம். அமைதியானவழியில், காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுப்போம் என்றார் ராமு வசந்தன்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications