ரயிலில் மூட்டைப் பூச்சிக் கடி! பயணிகள் கொந்தளிப்பு
சேலம்:
திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூர் வந்த ரயிலில் மூட்டைப் பூச்சிக் கடி தாங்க முடியாமல் அப்பெட்டியில் பயணம் செய்தஅய்யப்ப பக்தர்கள் கொந்தளித்து நள்ளிரவில் ரயிலை நிறுத்தினர்.
திருவனந்தபுரத்திலிருந்து பெங்களூர் வரை செல்லும் ஐலண்ட் எக்ஸ்பிரஸ் ரயில் அங்கிருந்து செவ்வாய்க்கிழமை இரவுகிளம்பியது. புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் ரயில் சேலத்தை அடைந்தது. அங்கிருந்து கிளம்பிய சிறிது நேரத்தில் ரயில்திடீரென நிறுத்தப்பட்டது.என்னவென்று பார்த்தபோது, குளிர்சாதன வசதி கொண்ட பெட்டியில் பயணம் செய்த அய்யப்ப பக்தர்கள்தான் அவசர காலசங்கிலியைப் பிடித்து ரயிலை நிறுத்தியது தெரியவந்தது. ரயில் டிரைவர், டி.டி.ஆர். உள்ளிட்ட அனைவரும் விரைந்து சென்றுஎன்னவென்று விசாரித்தனர்.
அப்போது அந்த பக்தர்கள் பயணம் செய்த பெட்டியில் மூட்டைப் பூச்சி தொல்லை தாங்க முடியவில்லை என்றும், தூங்கவேமுடியவில்லை என்றும் பக்தர்கள் கோபத்துடன் கூறினர். தங்களுக்கு வேறு பெட்டியில் இடம் கொடுக்குமாறும் அவர்கள்கோரினர். ஆனால் இந்த நேரத்தில் பெட்டிக்கு எங்கே போவது என்று ரயில்வே அதிகாரிகள் கூறினர்.
ஆனால் பெட்டியை மாற்றாமல் ரயிலை எடுக்க விட மாட்டோம் என பக்தர்கள் தீர்மானமாக கூறவே அங்கு பரபரப்பு ஏற்பட்டது.நேரம் ஆக ஆக மற்ற பயணிகளும் கோபமடையத் தொடங்கினர்.
இதைத் தொடர்ந்து மூட்டைப் பூச்சி தொல்லை உள்ள பெட்டியில் பயணம் செய்தவர்களுக்கு அவர்களது பயணக் கட்டணத்தைமுழுமையாகத் திருப்பிக் கொடுக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி அவர்களிடம் பணம் திருப்பித் தரப்பட்டது. அதன்பின்னர் ரயில் புறப்பட்டுச் சென்றது.
பயணக் கட்டணத்தைத் திரும்பப் பெற்ற பயணிகள், ஆம்னி பேருந்தில் ஏறி பெங்களூர் சென்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications