பச்சை குத்தும் போட்டியில் தமிழக காங்கிரஸ்!
சென்னை:
தமிழக காங்கிரஸார் மத்தியில் நூதனமான போட்டி நிலவுகிறது. ஜி.கே.வாசன் பெயரை பச்சைக் குத்துவதில் அவரது ஆதரவாளர்கள்இறங்கியுள்ளனர். அவர்களுக்குப் போட்டியாக இளங்கோவன் ஆதரவாளர்கள் ராகுல் காந்தி பெயரை பச்சை குத்த ஆரம்பித்துள்ளனர்.
தமிழக காங்கிரஸ் கட்சியில் அவ்வப்போது ஏதாவது சலசலப்பு ஏற்படுவது வழக்கம். பெரும்பாலும் கோஷ்டி மோதல்தான் இதற்கு முக்கியக்காரணமாக இருக்கும். சமீபத்தில் கூட எஸ்.ஆர்.பி. புண்ணியத்தால், சிலநாட்களாக வாசன் மற்றும் இளங்கோவன் ஆதரவாளர்கள் மாறிமாறி வார்த்தைப் போரில் ஈடுபட்டு வருகின்றனர்.இப்போது கோஷ்டிப் பூசல் வேரு ரூபத்தில் திரும்பி காங்கிரஸ்காரர்களிடையே புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜி.கே.வாசன்ஆதரவாளர்கள் சிலர் சமீபத்தில் தங்களது கைகளில் வாசனின் பெயரை பச்சை குத்திக் கொண்டனர்.
வாசனின் தீவிர ஆதரவாளரான ராயபுரம் மனோ (மூத்த தலைவர் எஸ்.ஜி.விநாயகமூர்த்தியின் வீட்டில் தாக்குதல் நடத்தியதாக கூறி கைதுசெய்யப்பட்டவர்) தலைமையில் வாசன் ஆதரவாளர்கள் பச்சை குத்திக் கொண்டனர். இதை ஒரு விழா போல மனோ ஏற்பாடுசெய்திருந்தார்.
இந்த நிலையில் வாசன் ஆதரவாளர்களுக்குப் பாட்டியாக இளங்கோவன் ஆதரவாளர்கள் ராகுல் காந்தியின் பெயரை தங்களது கைகளில்பச்சை குத்திக் கொள்ள ஆரம்பித்துள்ளனர். இதற்கான நிகழ்ச்சி சத்தியமூர்த்தி பவனிலேயே இன்று காலை நடந்தது.
ராகுல் காந்தியின் பெயரை கைகளில் பச்சை குத்திக் கொள்ளும் வைபவத்தை இளைஞர் காங்கிரஸ் தலைவர் விஷ்ணு பிரசாத் தொடங்கிவைத்தார். முதலில் அவர் தனது கையில் ராகுல்ஜி என்ற பெயரை பச்சை குத்திக் கொண்டார். அவரைத் தொடர்ந்து ஏராளமானோர்வரிசையாக நின்று பச்சை குத்திக் கொண்டனர்.
இன்று மட்டும் 200 பேருக்கு பச்சை குத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக விஷ்ணு பிரசாத் பின்னர் தெரிவித்தார். தொடர்ந்து அவர்கூறுகையில், முன்பு எம்.ஜி.ஆர். கட்சி ஆரம்பித்தபோது, கைகளில் பச்சை குத்திக் கொள்ளும் பழக்கத்தை ஆரம்பித்து வைத்தார். அதேபாணியில் நாங்கள் இப்போது பச்சை குத்திக் கொள்கிறோம் என்றார்.
காங்கிரஸ்காரர்களின் கோஷ்டிப் பூசல் இப்படி பச்சை குத்திக் கொள்வது வரை வந்து விட்டது குறித்து ஆரம்ப கால காங்கிரஸ்கார்ரகள்பெரும் வருத்தமும், அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். கண்டிப்பாக யாராவது காங்கிரஸைக் காப்பாற்றியே ஆக வேண்டும்!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications