தனுஷ் படத்துக்கு சிவாஜி ரசிகர்கள் எதிர்ப்பு!
சென்னை:
நடிகர் தனுஷ் நடிக்கவுள்ள புதிய படத்திற்கு திருவிளையாடல் என பெயர் வைக்கப்பட்டிருப்பதற்கு சிவாஜி கணேசன் பேரவை என்றஅமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சிவாஜி கணேசன் நடித்துப் புகழ் பெற்ற திரைப்படம் திருவிளையாடல். அதே பெயரில் தற்போது தனுஷ் நடிக்க ஒரு படம் உருவாகிறது.இதற்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சமூக நலப் பேரவை என்ற அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக அந்த அமைப்பின் அமைப்பாளர் சந்திரசேகரன் விடுத்துள்ள அறிக்கையில், பழைய திரைப்படத் தலைப்புகளில் புதியபடங்கள் தயாரிக்கப்படுவது பல்வேறு கால கட்டங்களில் நடந்துள்ளது. ஆனால் திருவிளையாடல் தலைப்பு முற்றிலும்வித்தியாசமானதாகும்.
சிவாஜி கணேசன், சாவித்திரி ஆகியோர் நடித்த திருவிளையாடல் படம் இன்றளவும் மக்கள் மனதில் அழிக்க இயலாத ஒரு வரலாற்றுக்காவியமாகும். திருவிளையாடல் என்ற பெயரைக் கேட்டாலே நடிகர் திலகத்தின் நினைவுதான் மக்களுக்கு வரும்.
சிவாஜி கணேசன் பேசிய பைந்தமிழும், அத்திரைப்படத்திலிருந்த தெய்வீகமும்தான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு மக்கள் மனதில்ஆழமாக பதிந்து விட்ட பெயர் இது.
ஆனால் தற்போது தனுஷ் நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கும் படத்திற்கு திருவிளையாடல் என பெயர் சூட்டப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சிஅடைந்தோம். அது நிச்சயம் ஒரு ஆன்மீகப் படமாக இருக்க முடியாது. தனுஷ் நடித்த முந்தைய சில திரைப்படங்களைப் பார்த்தாலே இந்தப்படம் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு கிண்டல் செய்து திருவிளையாடல் என்ற பெயரில் மீண்டும் படம்எடுப்பது பக்தர்கள், சிவாஜி ரசிகர்கள் மனதைப் புண்படுத்தும் செயலாகும்.
எனவே தனுஷ் நடிக்கும் படத்தின் திருவிளையாடல் என்ற பெயரை உடனடியாக மாற்றக் கோருகிறோம். எங்களது கோரிக்கைக்குதனுஷும், படத் தயாரிப்பாளரான அவரது சகோதரியும் மதிப்பு கொடுப்பார்கள் என நம்புகிறோம்.
இதுதொடர்பாக தயாரிப்பாளர் சங்கம், திரைப்பட வர்த்தக சபை, நடிகர் சங்கம், தணிக்கை குழு ஆகியவற்றுக்கும் நாங்கள் கடிதம்எழுதியுள்ளோம். படத்தின் பெயரை மாற்ற முன்வராவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து நாங்கள் முடிவெடுப்போம் என்றுகூறியுள்ளார் சந்திரசேகரன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications