For Daily Alerts
விஜயகாந்த் கட்சிக் கொடிக்கு திருப்பதியில் பூஜை!
திருப்பதி:
மதுரையில் கடந்த 14ம் தேதி விஜயகாந்த்தின் புதிய கட்சி தொடங்கப்பட்டது. ரசிகர் மன்றக் கொடியே கட்சிக் கொடியாகவும்அறிவிக்கப்பட்டது. இதுவரை திருப்பதி கோவிலுக்குப் போயிராத விஜயகாந்த், முதல் முறையாக மாநாடு நடப்பதற்கு முன்பாகஅங்கு சென்று வெங்கடாஜலபதியை வழிபட்டார்.
தற்போது மாநாடு வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில் மீண்டும் திருப்பதிக்கு செவ்வாய்க்கிழமை சென்றார் விஜயகாந்த். அங்குதனது கட்சிக் கொடியை வைத்து பூஜை செய்தார். விஜயகாந்த்துடன் மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீப், மகன்கள்,குடும்பத்தினரும் வந்திருந்தனர்.
பூஜை செய்த கொடியை சென்னையில் உள்ள தனது கட்சி தலைமை அலுவலகத்தில் (ஆண்டாள் அழகர் கல்யாண மண்டபம்)ஏற்றவுள்ளார் விஜயகாந்த்.
| ||||
![]() திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |