போலீஸ் சோதனை: ஜெயலட்சுமி புலம்பல்!
மதுரை:
வாக்கி டாக்கியை எங்கேயோ தொலைத்து விட்டு எனது வீட்டில் தேடுவதாக கூறி போலீஸார் தொல்லை செய்வதாக சிவகாசி ஜெயலட்சுமிபுலம்பியுள்ளார்.
மதுரை எல்லீஸ் நகரில் வசிக்கும் சிவகாசி ஜெயலட்சுமியின் வீட்டில் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ள பெண் காவலர் தனது வாக்கிடாக்கியைத் தொலைத்து விட்டார். இதையடுத்து கடந்த 2 நாட்களாக ஜெயலட்சமியின் வீட்டில் போலீஸார் சோதனை போட்டுவருகின்றனர்.இதனால் ஜெயலட்சமி அதிருப்தி அடைந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நீதிமன்ற உத்தரவுப்படி எனக்கு போலீஸ் பாதுகாப்புகொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் பாதுகாப்புக்காக வரும் போலீஸார் தங்களது பணியில் கவனம் செலுத்துவதை விட்டு விட்டுகவனக்குறைவாக இருந்துள்ளனர். இதனால்தான் வாக்கி டாக்கியை அவர்கள் தொலைத்து விட்டனர்.
அவர்கள் வாக்கி டாகிகயைத் தொலைத்தால் நானா அதற்கு பொறுப்பு? சில மாதங்களுக்கு முன்பு கூட போலீஸ்காரர்களின் ஷூக்கள்தொலைந்து போயின. அது எங்கே போனது என்று இதுவரை யாருக்கும் தெரியாது.
எனது வீட்டுக்குக் காவலாக இருக்கும் போலீஸார் பாதி நேரம் தூக்கத்திலேயே இருப்பார்கள். இப்படி இருந்தால் பொருட்கள் காணாமல்போகாமல் என்ன செய்யும்? இப்போது சோதனை என்ற பெயரில் 2 நாட்களாக என்னைத் தொந்தரவு செய்கிறார்கள்.
இவர்களது தொந்தரவு பொறுக்க முடியாமல் மாடியில் குடியிருந்தவர்கள் காலி செய்து விட்டுப் போய் விட்டார்கள் என்று புலம்பியுள்ளார்ஜெயலட்சுமி.












Click it and Unblock the Notifications