தேனி, நெல்லையில் மாநாடு! கார்த்திக்கும் குதிக்கிறார்!
தேனி:
நடிகர் விஜயகாந்த்தைத் தொடர்ந்து முன்னணி நடிகரான கார்த்திக்கும் அரசியல் கட்சியைத் தொடங்குகிறார். திருநெல்வேலியில்பிரமாண்டமான அரசியல் மாநாட்டை நடத்தும் கார்த்திக், அங்கு தனது புதிய அரசியல் கட்சியின் பெயரை அறிவிக்கிறார்.
ரஜினி அரசியலுக்கு வரப் போகிறார் என்று முன்பு பெரும் பரபரப்பாக இருந்தது. ஆனால் அது புஸ்வானமாகிப் போய் விட்டது.தமிழக அரசியல்வாதிகள் செய்த அரசியலைப் பார்த்து அரண்டு போன ரஜினி பின் வாங்கி விட்டார்.ஆனால் நான் கண்டிப்பாக வருவேன் என்று கூறி வந்த விஜயகாந்த் சொன்னது போலவே மதுரையில் பிரமாண்டமானகூட்டத்தைத் திரட்டி தனது கட்சியையும் ஆரம்பித்து, எம்.ஜி.ஆர். பயன்படுத்திய வேனில் கிராமம் கிராமமாக போக திட்டமிட்டுவருகிறார்.
இந்த நிலையில் நடிகர் கார்த்திக்கும் தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்தார். மதுரையில் அவர் கூட்டிய ரசிகர் மன்ற கூட்டத்தில்கூடிய பிரமாண்ட ரசிகர் கூட்டம் கார்த்திக்கின் மீதான கவனத்தை தீவிரப்படுத்தியது. அன்றைய கூட்டத்தில் அவர் தனது கட்சிஅறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரசிகர்களின் திடீர் ரகளையால் அது பாதியிலேயே முடிந்துவிட்டது.
இந்த நிலையில் கார்த்திக் தலைமையில் தேவர் சமுதாயத்தைச் சேர்ந்த பல நடிகர்கள், பிரமுகர்கள் திரண்டு வருகின்றனர்.இவர்களை இணைத்து புதிய கட்சியைத் தொடங்க கார்த்திக் முடிவு செய்து விட்டார் என அவரது ரசிகர்கள் கூறுகிறார்கள். இதைஉறுதிப்படுத்தும் வகையில் கார்த்திக் நடத்தி வரும் சரணாலயம் அமைப்பின் மாநில அமைப்பாளரும், கார்த்திக்கின்மைத்துனருமான பொன் முருகன் பேசியுள்ளார்.
தேனியில் நடந்த சரணாலயம் அமைப்பின் கூட்டத்தில் அவர் பேசுகையில், நாம் அனைவரும் கட்டுக்கோப்புடன்,கண்ணியத்துடன் நடந்து தவைலரின் கரத்தை வலுப்படுத்த வேண்டும். விஜயகாந்த் மதுரையில் மாநாடு நடத்தி முடித்துள்ளார்.ஆனால் அதை விட மிகப் பிரமாண்டமாக, அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் நாம் நமது மாநாட்டை நெல்லையில்நடத்தவுள்ளோம்.
அதற்கு முன்பாக காளையார்கோவிலில் வருகிற அக்டோபர் 27ம் தேதி நடக்கும் மருது சகோதரர்களின் குரு பூஜை விழாவில்தலைவர் கலந்து கொள்ளவுள்ளார். அதன் பின்னர் ராமேஸ்வரத்தில் அன்று பொதுக் கூட்டம் நடக்கவுள்ளது. அதில் தலைவர்கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
அதன் பின்னர் 28ம் தேதி ராஜபாளையம் பூலித் தேவன் நினைவிடத்திலும், 29ம் தேதி உசிலம்பட்டியில் மூக்கையாத் தேவர்நினைவிடத்திலும், 30ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்திலும் அஞ்சலி செலுத்துகிறார்.
அன்று இரவு தேனியில் நலத் திட்ட உதவிகளை வழங்கி பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். அந்தக் கூட்டம் நமது அரசியல்பிரவேசத்துக்கு வழி வகுப்பதாக இருக்கும். புதிய அரசியல் கட்சியின் அறிவிப்பை தலைவர் அங்கு வெளியிட்டாலும்வெளியிடலாம். அல்லது நெல்லையிலும் அறிவிப்பு வெளியாகலாம் என்று பேசியுள்ளார் பொன் முருகன்.
பொன்முருகனின் இந்த பேச்சு கார்த்திக் ரசிகர்களிடையே புதிய உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. விஜயகாந்த் மாநாட்டை மிஞ்சும்வகையில் தங்களது மாநாட்டை நடத்தி விட வேண்டும் என்று அவர்கள் தீர்மானித்துள்ளனர். தேனியையும், நெல்லையையும்ஒரு கலக்கு கலக்கி விட வேண்டும் என்று உறுதி பூண்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications