சிகிச்சைக்கு மறுப்பு: மதானி அடம்!
சென்னை:
சென்னை மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக் கொள்ள மாட்டேன் என்று கோவை குண்டுவெடிப்புக் கைதியான அப்துல் நாசர்மதானி அடம் பிடிக்கிறார் என கோவை சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் பல உயிர்கள் பலியாக காரணமாக இருந்ததாக மதானி, அல் உம்மா தலைவர்பாட்ஷா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இவர்களில் மதானி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதை ஏற்ற உச்சநீதிமன்றம் அவரது ஜாமீன் மனுவை நிராகரித்து விட்டது.
இந்த நிலையில் மதானிக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அரும்பாக்கத்திலிருந்து இரண்டு ஆயுர்வேத சிகிச்சை நிபுணர்கள்கோவை சிறைக்கு வந்தனர். அவர்கள் மதானியை சந்தித்து தாங்கள் சிகிச்சைக்காக வந்துள்ளதாக கூறி அவரது பிரச்சினைகள்குறித்துக் கேட்டனர்.
அப்போத அவர்களுடன் பேச மறுத்த மதானி, உங்களது சிகிச்சையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று பேசியுள்ளார். இதைத்தொடர்ந்து சென்னை டாக்டர்கள் இருவரும் திரும்பிச் சென்று விட்டனர் என்று கோவை சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கேரளாவுக்குப் போய்த்தான் சிகிச்சை எடுத்துக் கொள்வேன் என மதானி தொடர்ந்து பிடிவாதம் பிடித்து வருவதுகுறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications