ஊட்டி ரோஜா பூங்காவுக்கு சர்வதேச அங்கீகாரம்!
உதகமண்டலம்:
ஊட்டியில் உள்ள ரோஜா பூங்காவுக்கு சர்வதேச ரோஜா சங்கம் அங்கீகாரம் அளித்துள்ளது.
ஊட்டி விஜயநகரம் பகுதியில் ரோஜாப் பூங்கா உள்ளது. கண்ணைக் கவரும் 2000க்கும் மேற்பட்ட அழகிய ரோஜா செடிகள் இங்குவளர்க்கப்பட்டு வருகின்றன. ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் முக்கிய பார்வையிடமாக இந்தப் பூங்கா விளங்குகிறது.30,000க்கும் மேற்பட்ட ரோஜாப் பூங்க்கள் இங்கு உள்ளன. இந்தியாவின் மிகப் பெரிய ரோஜாப் பூங்காவாக இது திகழ்கிறது. கடந்த1995ம் ஆண்டுதான் இந்த ரோஜாப் பூங்கா ஏற்படுத்தப்பட்டது. முதல்வர் ஜெயலலிதா இதை திறந்து வைத்தார்.
இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில் எழிலுற அமைந்துள்ள இப்பூங்காவுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்கச் செய்வதற்கானநடவடிக்கைகளில் தமிழக அரசு இறங்கியது. அதன் முயற்சியின் பேரில், பிரான்ஸில் உள்ள சர்வதேச ரோஜா சங்கத்தைச் சேர்ந்த குழுவினர்சமீபத்தில் இங்கு வந்து ரோஜாப் பூங்காவைப் பார்வையிட்டனர்.
ரோஜாக் கூட்டத்தில் எழிலில் மயங்கிய அவர்கள் நிச்சயம் சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும் என உறுதியாக கூறினர். அதன்படி தற்போதுஊட்டி ரோஜாப் பூங்காவுக்கு சர்வதேச ரோஜா சங்கத்தின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இதுதொடர்பாக பிரான்ஸிலிருந்து இந்திய ரோஜா சங்கத்தின் தலைவருக்குக் கடிதம் வந்துள்ளது. அதுதொடர்பான தகவல் நீலகிரி மாவட்டதோட்டக் கலைத் துறை இணை இயக்குநர் சங்கரனுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு மே மாதம் 14 , 15 ஆகிய தேதிகளில் ஜப்பானின் ஒசாகா நகரில் நடைபெறும் சர்வதேச ரோஜா மாநாட்டின்போது ஊட்டிரோஜாப் பூங்காவுக்கு சர்வதேச அங்கீகாரம் வழங்குவதற்கான சான்றிதழ் கொடுக்கப்படும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications