கோவை ரயில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

Subscribe to Oneindia Tamil

கோவை:

கோவையிலிருந்து கிளம்பும் மற்றும் கோவை வழியாக செல்லும் ரயில்களில் சில குண்டு வைத்துத் தகர்க்கப்படும் என வந்ததகவலையடுத்து கோவை ரயில் நிலையம் வழியாக செல்லும் ரயில்களில் பலத்த சோதனை நடத்தப்பட்டது.

செவ்வாய்க்கிழமை இரவு கோவை ரயில் நிலைய அதிகாரிக்கு வந்த தொலைபேசி அழைப்பில் பேசிய நபர், திருவனந்தபுரத்திலிருந்துகோவைக்கு வரும் ரயில்கள் சில குண்டு வைத்துத் தகர்க்கப்படும் என கூறி விட்டு இணைப்பைத் துண்டித்துள்ளார்.

இதையடுத்து போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர். கோவை ரயில் நிலையம் மற்றும் அருகே உள்ள போத்தனூர் ரயில் நிலையம்ஆகியவற்றில் போலீஸார் குவிக்கப்பட்டனர். இந்த இரு நிலையங்கள் வழியாக செல்லும் ரயில்கள், கிளம்பும் ரயில்களில் போலீஸார் தீவிரசோதனை நடத்தினர்.

திருவனந்தபுரம்-சென்னை எக்ஸ்பிரஸ், சென்னை- திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், சென்னை-மங்களூர் மற்றும் சென்னை-ஆலப்புழைஎக்ஸ்பிரஸ் ரயில்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. மேலும், இன்று பிற்பகல் கோ வந்த திருச்சி-பாலக்காடு ரயிலிலும் சோதனைநடந்தது.

ஆனால் வெடிகுண்டு எதுவும் இந்த சோதனையின்போது கைப்பற்றப்படவில்லை. இருப்பினும் இரு ரயில் நிலையங்களிலும் தொடர்ந்துபோலீஸார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+