மகளிர் சுய உதவிக் குழு: சட்டசபையில் சூடான விவாதம்!
சென்னை:
மகளிர் சுய உதவிக் குழுக்களை அறிமுகம் செய்தது யார் என்பது தொடர்பாக தமிழக சட்டசபையில் இன்று படு சூடான விவாதம் நடந்தது.
சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது, அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசுகையில், மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்கிஅதற்கு ஊக்கம் கொடுத்தவர் முதல்வர் ஜெயலலிதா என்று பேசினார். இதற்கு திமுக எம்.எல்.ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.ஜெயராமன் பேசுகையில், முதல்வர் ஜெயலலிதாதான் மகளிர் சுய உதவிக்குழுக்களை ஏற்படுத்தினார். இந்தக் குழுக்கள் சிறப்பாகசெயல்படுவதாக குடியரசுத் தலைவர் முதல் மாநில ஆளுநர் வரை அனைத்துத் தரப்பினரும் பாராட்டியுள்ளனர். இவர்களுக்கு கூட்டுறவுவங்கிகள் மூலம் தாராளமாக கடன் வழங்கப்படுகிறது. மாநில அரசும் ரூ. 10,000 மானியமாக வழங்குகிறது.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை விட மாநில கூட்டுறவு வங்கிகள்தான் அதிக அளவில் கடன் வழங்குகின்றன. பல்வேறு சிறுதொழில்களை நடத்த இவர்களுக்கு கடன் வழங்கி தமிழக அரசு ஊக்கப்படுத்தி வருகிறது என்றார்.
அப்போது குறிப்பிட்ட திமுக உறுப்பினர் தண்டாரம்பட்டு வேலு, எந்த ஆண்டு மகளிர் சுய உதவிக் குழுவை நீங்கள் ஆரம்பித்தீர்கள்என்பதை சொல்ல முடியுமா என்று கேட்டார். அவருக்கு ஆதரவாக மேலும் சில திமுக எம்.எல்.ஏக்கள் கேள்வி எழுப்பினர்.
ஆனால் அதற்கு அமைச்சர் ஜெயராமன் பதிலளிக்கவில்லை. மாறாக சபாநாயகரின் அனுமதியின்றி உறுப்பினர்கள் எழுந்து பேசுவதாககாளிமுத்துவை நோக்கிக் கூறினார். இதனால் அவையில் சிறிது நேரம் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.
அப்போது திமுக உறுப்பினர் புகழேந்தி எழுந்து, கடந்த 1989ம் ஆண்டு திமுக ஆட்சியில் கருணாநிதி முதல்வராக இருந்தபோதுதான் மகளிர்சுய உதவிக் குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டன. அதற்கு மத்திய அரசுதான் அதிக அளவில் கடன் வழங்கி வருகிறது. இந்தத் திட்டத்தைநிறைவேற்றும் பொறுப்பு மட்டுமே மாநில அரசுக்கு உள்ளது என்று கூறினார். இப்படியாக விவாதம் தொடர்ந்து நடந்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications