கோலாவுக்கு எதிராக சாலை மறியல்
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில், கோகோ கோலா நிறுவனத்திற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்சாலை மறியல் போராட்டம் நடந்தது.
கங்கைகொண்டான் சிப்காட் தொழில் வளாகத்தில் கோகோ கோலா நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவு அமைக்கப்பட்டு வருகிறது.இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிறுவனம் வந்தால், நிலத்தடி நீர் முழுமையாகசுரண்டப்படும் அபாயம் இருப்பதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.ஏற்கனவே இதே நிறுவனம் கேரளாவில் உற்பத்திப் பிரிவை ஆரம்பித்தபோது அங்குள்ள அரசியல் கட்சிகள், பொதுமக்கள்தெரிவித்த கடும் எதிர்ப்பால் அதை மூட வேண்டியதாயிற்று. தற்போது கங்கை கொண்டானில் இந்த நிறுவனம் கால் பதிக்கமுயற்சித்து வருகிறது.
இந்த நிலையில் கங்கைகொண்டானில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல்போராட்டம் நடத்தப்பட்டது. இதில்க லந்து கொண்ட 800க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர். அனைவரும்பின்னர் விடுவிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications