ஏர் இந்தியா விமானி ஏற்படுத்திய பீதி!
சென்னை:
என்ஜின் கோளாறு என்று தவறாக நினைத்த ஏர் இந்தியா விமான விமானி, ஒரு என்ஜினுடன் சென்னை விமான நிலையத்தில்விமானத்தை தரையிறக்கினார். அதில் பயணம் செய்த 73 பேரும் பத்திரமாக உயிர் தப்பினர்.
சிங்கப்பூரிலிருந்து கோலாலம்பூர் வழியாக சென்னைக்கு வரும் ஏர் இந்தியா விமானம் இன்று பிற்பகல் 1 மணியளவில்சென்னைக்கு வந்தது. விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு ஒரு கிலோமீட்டரே இருந்த நிலையில், திடீரெனவிமானியிடமிருந்து தரைக்கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு தகவல் வந்தது.அதில், விமான என்ஜினில் ஒன்று பழுதுபட்டுள்ளதாக சந்தேகப்படுவதாகவும், எனவே அனைத்து அவசர கால ஏற்பாடுகளையும்செய்யுமாறும் விமானி தெரிவித்தார். இதைத் தொடர்ந்த தீயணைப்பு வண்டிகள், ஆம்புலன்ஸ், மீட்புப் பணிக்குத் தேவையானஅனைத்து ஏற்பாடுகளையும் விமான நிலைய அதிகாரிகள் மின்னல் வேகத்தில் செய்தனர்.
இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட விமானம் ஒரு என்ஜினுடன் மிகவும் பத்திரமாக தரையிறங்கியது. அவசர காலங்களில்மேற்கொள்ளப்பட வேண்டிய முறைகளைக் கடைப்பிடித்து விமானி பத்திரமாக தரையிறக்கினார்.
இதைத் தொடர்ந்து பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் பத்திரமாக அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் பொறியாளர்கள்சம்பந்தப்பட்ட என்ஜினைப் பரிசோதித்துப் பார்த்தபோது அது சரியாக இருந்தது தெரியவந்தது. விமானத்தில் உள்ள ஆபத்துகால கருவி தவறாக சமிக்ஞை கொடுத்ததால் விமானி பதட்டமடைந்து, தரைக்கட்டுப்பாட்டு மையத்தை உஷார்படுத்தியதுதெரியவந்தது.
இருப்பினும் ஒற்றை என்ஜினுடன் மிகவும் பத்திரமாக விமானத்தை தரையிறக்கிய விமானியை விமான நிலைய அதிகாரிகள்,பொறியாளர்கள், பயணிகள் பாராட்டினர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications