கேப்டன் பதவிக்கு கங்குலி லாயக்கற்றவர்! கிரேக் சேப்பல்
கொல்கத்தா:
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியை வகிக்க உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் செளரவ் கங்குலி லாயக்கற்றவர்என்று கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கிரேக் சேப்பல் காட்டமாக கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதலாவது டெஸ்ட் போட்டித்தொடர் தொடங்குவதற்கு முன்பாக கிரேக் சேப்பலுக்கும், கங்குலிக்கும் இடையே பிரச்சினை ஏற்ப்டடது. கிரேக் சேப்பல் குறித்துமறைமுகமாக கங்குலி புகார் கூறினார்.இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பிரச்சினை குறித்து வருகிற 27ம் தேதி விசாரணை நடத்தப்படும் எனஇந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் ரன்பீர் சிங் மஹிந்திராவுக்கு,கிரேக் சேப்பல் ஒரு பேக்ஸ் செய்தியை அனுப்பியுள்ளார்.
அந்த பேக்ஸ் செய்தியில் கங்குலியை அவர் கடுமையாக சாடியுள்ளார். கேப்டன் பதவிக்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும்தகுதியற்றவராக கங்குலி உள்ளார். அவரை வைத்துக் கொண்டு இந்தியாவால் 2007ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியைசந்திக்க முடியாது. அவர் தொடர்ந்து கேப்டன் பொறுப்பில் நீடித்தால் அணி பெரும் தோல்விகளை சந்திக்க நேரிடும்.
அணி வீரர்களிடையே பிளவு ஏற்படுத்தும் முயற்சியில் கங்குலி ஈடுபட்டுள்ளார். அவரது தலைமைக்கு வீரர்களிடம் மரியாதைஇல்லை. அவரை வீரர்கள் மதிப்பதில்லை. அவர் மீது நம்பிக்கையும் வைப்பதில்லை என்று கங்குலி குறித்து சேப்பல் மிகக்கடுமையாக கூறியுள்ளதாக தெரிகிறது.
சேப்பலிடமிருந்து தனக்கு பேக்ஸ் வந்துள்ளதை மஹிந்திரா உறுதி செய்துள்ளார். இருப்பினும் அதில் இடம்பெற்றுள்ளவிவரங்களை வெளியிட அவர் மறுத்து விட்டார். இந்த பேக்ஸ் குறித்து 27ம் தேதி கூட்டத்தில் விவாதிக்கப்படும் என அவர்தெரிவித்துள்ளார்.
கங்குலியை மன ரீதியில் சரியில்லாதவர் என்று சேப்பல் கடுமையாக சாடியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications