இளங்கோவனுக்கு ஆதரவாக திரளும் காங். தலைவர்கள்!
சென்னை:
மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு ஆதரவாக 13 மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் குரல் கொடுத்துள்ளனர்.இதன் மூலம் காங்கிரஸ் உட்கட்சிப் பூசல் மேலும் வலுக்கத் தொடங்கியுள்ளது.
சமீப காலமாக தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார் இளங்கோவன். அவருக்கு எதிராக ஜி.கே.வாசன் ஆதரவாளர்கள்போர்க்குரல் எழுப்பியுள்ள நிலையில் 13 மாவட்ட காங்கிரஸ் தவைலர்கள் இளங்கோவனுக்கு ஆதரவாக அறிக்கை விட்டுள்ளனர்.அதில், பிரிந்து கிடந்த காங்கிரஸ் கட்சியை (தமிழ் மாநில காங்கிரஸ், ராஜீவ் காங்கிரஸ், ஜனதாதளம்) மீண்டும் காங்கிரஸ்கட்சியில் சேர்க்க அரும்பாடுபட்டவர் இளங்கோவன். சோனியா காந்தியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும், தமிழகத்தில்காங்கிரஸ் கட்சிக்குப் புத்துயிர் ஊட்ட வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகவே அவர் இக்கட்சிகளை காங்கிரஸ் கட்சியுடன்சேர்க்க உதவினார்.
இளங்கோவன் கட்சித் தலைவராக இருந்தபோதும், தற்போதும், கட்சியின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டே உழைத்துவருகிறார். இந்த நிலையில் அவருக்கு எதிராக சில காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் குரல் கொடுத்திருப்பது கண்டனத்துக்குரியது.
சோனியா காந்தியை தரம் தாழ்ந்து முதல்வர் ஜெயலலிதா விமர்சித்தபோது, அவருக்கு எதிராக குரல் எழுப்பிய ஒரே தலைவர்இளங்கோவன் மட்டுமே. மற்ற தலைவர்கள் அப்போது எங்கே போனார்கள் என்பது தெரியவில்லை.
திமுக தலைவர் கருணாநிதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டபோதும், மணிசங்கர அய்யர், ப.சிதம்பரம் ஆகியோருக்கு எதிராகஜெயலலிதா கருத்து தெரிவித்தபோதும் மிகவும் வன்மையாக கண்டித்தவர் இளங்கோவன் மட்டுமே. எஸ்.ஆர்.பியை பலமுறைஜெயலலிதா விமர்சித்தபோதும், அவரைக் கண்டித்தவர் இளங்கோவன் மட்டுமே.
இப்படிப்பட்ட தலைவருக்கு எதிராக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது கட்சியை பலவீனப்படுத்தஉதவுமே தவிர, வளர்ச்சிக்கு எந்தவிதத்திலும் உதவாது என்று அவர்கள் கூறியுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications