காலை உணவுடன் மாணவர்களுக்கு சூடான பால்! புதுவையில் அறிமுகம்
பாண்டிச்சேரி:
அக்டோபர் 2ம் தேதி முதல் பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் எட்டாவதுவகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு சூடான பால் கொடுக்கப்படும் என அம்மாநில முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், காந்தி ஜெயந்தி தினம் முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8வது வகுப்புவரை பயிலும் மாணவ, மாணவியருக்கு சூடான பால் வழங்கப்படும்.இந்தக் குழந்தைகளுக்கு ஏற்கனவே ராஜீவ் காந்தி இலவச காலை உணவுத் திட்டத்தின் மூலம் காலை உணவு வழங்கப்படுகிறது.தற்போது கூடுதலாக பாலும் வழங்கப்படும். இதன் மூலம் 1.26 லட்சம் மாணவ, மாணவியர் பலன் பெறுவர். பாலுக்காககூடுதலாக ரூ. 2.83 கோடி செலவிடப்படும்.
மதிய உணவுத் திட்டத்தின் மூலம் ஏற்கனவே 1.26 லட்சம் மாணவ, மாணவியர் பலனடைந்து வருகிறார்கள். இது 12வது வகுப்புவரை கொடுக்கப்படுகிறது. மதிய உணவுக்காக ஆண்டுதோறும் ரூ. 8.97 கோடி ரூபாயும், காலை உணவுக்காக ரூ. 10.25 கோடியும்செலவிடப்படுகிறது என்றார் ரங்கசாமி.
இதுதவிர மேலும் பல சலுகை அறிவிப்புகளையும் அவர் செய்தியாளர்களிடம் வெளியிட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications